கம்பராமாயணம் 6892 · யுத்த 9.39
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நல் நெறி அறிஞ ! - சன்மார்க்கம் இன்னதென உணர்ந்தொழுகும் அறிவு சான்றோனே! நளி நெடுந் தெருவின் நாப்பண் - பெருமை நிறைந்த நீண்ட தெருக்களின் நடுவே; பல்மணி மாடப் பத்தி நிழல் படப்படர்வ - பற்பல மணிகள் இழைத்து கட்டப்பட்டுள்ள மாடமாளிகை வரிசையின் ஒளிகள் (தம்மீது) படச் செல்கின்றவையான; புரவி எல்லாம் - குதிரைகள் யாவும்; பண்பால் தம் நிறம் தெரிகிலாத - இயற்கையாக அமைந்த தமது நிறம் அறிய இயலாமல்; ஒரு நிறம் சார்கிலாத - ஒரு குறிப்பிட்ட நிறத்தையும் கொள்ளாமல்; இன்னதோர் குலத்த என்று புலப்படா நோக்காய் - இன்ன நிறம் உடையவை இவை என்று அறிய இயலாதவை ஆயின (என்பதைப் பாராய்.
இலக்குவன் இந்நெறி மேற் கொண்டு ஒழுகுவான் என்பதனை, "வளையாவரு நன்னெறி நின்னறிவு ஆகும் அன்றே” (1730) என நகர் நீங்கு படலத்திலும் குறித்தமை நினைக. நளி- பெருமை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Knower of the good path, look! In the midst of the broad, long streets,
- moving where the light of the rows of many-jewelled mansions falls on them,
- their own natural colour cannot be made out, nor do they keep any one colour,
- nor can one tell what breed they are — all the horses.'
What the poem says
Irāmaṉ calls Ilakkuvaṉ one who knows the right path, as he did elsewhere in the epic. As the horses move through the wide streets, the many-coloured light from the jewelled mansions plays over them. Their own colour disappears, they change colour from moment to moment, and no one could say what breed they are.