கம்பராமாயணம் 6893 · யுத்த 9.40
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வீர! - வீரனாகிய இலக்குவனே! மெல் என் பளிங்கினால் விளங்குகின்ற - மெல்லிய பளிங்குக் கற்களினால் ஒளிர்கின்றனவும்; மாரனும் மருளச் செய்த மாளிகை - மன்மதனும் மயங்குமாறு அமைந்துள்ளனவுமான மாளிகைகள்; மற்று ஓர் சோதி சேர்தலும் தெரிவ - வேறு ஓர் ஒளி (தம்மீது) பட்டவுடன் கண்ணுக்குத் தெரிவனவாயும்; அன்றேல் தெரிகில - ஒளிபடாவிடில், கண்ணுக்குத் தெரியாதனவுமாயும், தெரிந்த காட்சி - விளங்குகின்ற காட்சியானது; நீரினால் இயன்ற என்ன - நீரினால் அமைந்தவை (இவை) என்னுமாறு; நிழல் எழுகின்ற நீர்மை நீ பாராய்- ஒளிதோன்றுகின்ற தன்மையை நீ பார்ப்பாயாக.
தனக்கென்று ஒரு தனி நிறமில்லாது, ஆன்மாவைப் போலச் சார்ந்ததன் வண்ணம் ஆவது நீர்க்கு இயல்பு. பம்பையின் நீரினைப் பளிங்குக்கு முன்னும் (3710) உவமிப்பார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Hero, look! Shining with soft crystal,
- the mansions built to bewilder even Māraṉ: when some other light
- falls on them, they can be seen; otherwise they cannot; and once seen,
- they cast reflections as though they were made of water.'
What the poem says
Some mansions are made of clear crystal. They are invisible until light strikes them, and then they shimmer with reflections as if they were built of water. Even Māraṉ, the god of love, known for his beauty and charm, would be bewildered by them.
The commentary observes that, like water, crystal has no colour of its own and takes the colour of whatever is near it, just as the soul does in philosophical teaching.