கம்பராமாயணம் 6894 · யுத்த 9.41

Section யுத்த காண்டம் / 9. இலங்கை காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘கோல்நிறக் குனிவில் செங்கைக் குமரனே! குளிர் வெண் திங்கள்
கால் நிறக் கதிரின் கற்றை தெற்றிய அனைய காட்சி
வால் நிறத் தரளப் பந்தர், மரகதம் நடுவண் வைத்த,
பால் நிறப் பரவை வைகும் பரமனை நிகர்ப்ப, பாராய்.

பொருள் · Meaning in Tamil

கோல்நிறக் குனிவில் செங்கைக் குமரனே! - அம்பினையும் ஒளியினையும் உடைய வளைந்த வில்லினை ஏந்திய சிவந்த கரங்களையுடைய குமாரனே! குளிர் வெண் திங்கள் கால் நிறக் கதிரின் கற்றை - குளிர்ந்த வெள்ளைச் சந்திரன் உமிழ்கின்ற வெள்ளை நிறக் கதிர்களின் தொகுதிகள்; தெற்றிய அனைய காட்சி - இடை விட்டுவிட்டுப் பின்னியது போன்ற தோற்றம் கொண்ட; வால் நிறத் தரளப் பந்தர் நடுவண் வைத்த மரகதம் - வெண்ணிற முடைய முத்துப் பந்தலின் நடுவே வைக்கப் பெற்றுள்ள மரகத மணிகளின் தொகுதி; பால் நிறப் பரவை வைகும் - வெள்ளை நிறப் பாற்கடலில் பள்ளி கொள்ளும்; பரமனை நிகர்ப்ப பாராய் - பரந்தாமனை ஒத்திருப்பதைப் பார்ப்பாயாக.

கோல் - அம்பு. நிறம் - ஒளி. வெண்ணிறம் உடைய முத்துப் பந்தர், திருப்பாற் கடலுக்கும், பச்சை நிறம் உடைய மரகத மணியின் தொகுதி, பாற்கடலின் இடையுறங்கும் திருமாலுக்கும் உவமைகள் ஆயின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Prince with red hand that holds the bent bow, bright with arrows! Where the cool white moon
  2. pours its sheaves of rays, as if they were woven together, a sight —
  3. the canopy of white pearls with emerald set in its midst
  4. is like the Supreme One who lies on the milk-white sea; look!'

What the poem says

Irāmaṉ points to a canopy of white pearls with green emeralds set at its centre. Under the moonlight it looks like the Ocean of Milk with Viṣṇu, whose body is dark green-blue, lying in the middle of it.

It is a quiet irony that Irāmaṉ, himself Viṣṇu in human form, finds the image of the reclining god in the demon king's city.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘kōl niṟak kuṉi vil ceṅ kaik kumaraṉē! kuḷir veṇ tiṅkaḷ
kāl niṟak katiriṉ kaṟṟai teṟṟiya āya kāṭci
vāl niṟat taraḷap pantar, marakatam naṭuvaṇ vaitta,
pāl niṟap paravai vaikum paramaṉai nikarppa, pārāy.