கம்பராமாயணம் 6895 · யுத்த 9.42
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கோள் அவாவு அரிஏறு அன்ன குரிசிலே ! - தன்னை எதிர்ப்பாரைக் கைக்கொண்டு வெல்ல விரும்பும் ஆண்சிங்கம் போன்ற இலக்குவனே! நாள் அவாம் மின் தோய் மாடத்தும்பர் - விண்மீன்கள் ஒளியைப் பெற விரும்புமாறு மின்னுகின்ற மாடங்களின் உச்சியில்; ஓர் நாகர் பாவை - ஒரு நாக உலகத்து மங்கை; காளவார் உறையின் வாங்கும் கண்ணடி - கருமை நிறமுள்ள நீண்ட உறையிலிருந்து எடுக்கும் (வட்ட வடிவக்) கண்ணாடியானது; வாள் அரா விழுங்கிக் காலும் - ஒளியுடைய இராகு கேது என்னும் பாம்புகளால் விழுங்கி உமிழப் பெறும்; மதியினை நிகர்த்த வண்ணம் கொள்ள நோக்காய்! - சந்திரனை ஒத்து விளங்கும் தன்மையை நன்கு பார்ப்பாயாக.
கோள்-கொள்ளுதல். முதல் நிலைத் தொழிற்பெயர் எதிர்க்கும் உயிர்களைத் தப்பாமல் கொல்லும் தன்மையால், சிங்க ஏற்றுக்கு இலக்குவன் உவமையானான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Lord like a lion that longs to seize its prey! Look well:
- atop the lightning-touched mansions that the very stars envy, a maiden of the Nāgas
- draws from a long black sheath a mirror, which, caught up in the sky,
- looks like the moon that the bright serpent swallows and lets go again.'
What the poem says
On the roof of a mansion that glitters so much the stars envy it, a serpent-maiden pulls a round mirror out of its dark case. The bright mirror coming out of the black sheath looks like the moon emerging from an eclipse.
In Indian myth eclipses happen when the serpent demons Rāhu and Kētu swallow the sun or moon and then release them. Ilakkuvaṉ is compared to a lion that never fails to bring down whatever opposes it.