கம்பராமாயணம் 6897 · யுத்த 9.44
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வாகை வெஞ்சிலைக்கைவீர- வெற்றியையே ஏந்தும் கொடிய வில்லையேந்தும் கைகட்குரிய வீரனே! மாலை மலர்க்குழல் புலர்த்த - மாலைப்பொழுதில் (தங்கள்) மலர் சூடிய கூந்தல்களை உலர்த்துவதற்காக; தோகையர் இட்ட- பெண்கள் மூட்டிய; தூமத்து அகில் புகை முழுதும் சுற்ற - நறும்புகை வகையைச் சார்ந்த அகிலின் புகை முழுவதும் சூழ்ந்து கொண்டதனால்; வேக வெங்களிற்றின் - விரைந்து செல்லும் வன்மையுடைய மதயானையின்; வன்தோல் மெய்யுறப் போர்த்த - வலியதோலினை மேனியில் நன்கு போர்த்துக் கொண்ட, தையல் பாகனின் - உமையொரு கூறனாகிய சிவபெருமானைப் போல; பொலியத் தோன்றும் - அழகுறத் தோன்றுகிற; பவள மாளிகையைப் பாராய்! - செம்பவழத்தாலான மாளிகைகளைப் பார்ப்பாயாக.
பவழ மாளிகை செம்மேனி அம்மானாகிய சிவபிரானையும், அம்மாளிகையைச் சூழ்ந்திருந்த அகிலின் கரும்புகை, அப்பெருமான் போர்த்துள்ள யானைத்தோல் போர்வைக்கும் உவமைகள் ஆயின.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Hero whose hand holds the fierce bow of victory! To dry their flower-decked hair in the evening,
- the peacock-like women lit fragrant akil, and as its smoke wraps all around,
- like the one who wrapped the tough hide of a swift, fierce elephant close about his body, the Lady's
- partner, it shines in splendour — look at the coral mansion!'
What the poem says
In the evening the women of Ilaṅkai dry their hair over the smoke of fragrant aloe-wood (akil). The dark smoke wraps around a red coral mansion.
The sight recalls Śiva, who shares half his body with the goddess Umā. He is red-bodied and wears the hide of an elephant he killed. The coral mansion is Śiva's red form, and the dark smoke is the elephant skin draped over him.