கம்பராமாயணம் 6898 · யுத்த 9.45

Section யுத்த காண்டம் / 9. இலங்கை காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘காவலன் பயந்த வீரக் கார்முகக் களிறே! கற்ற
தேவர்தம் தச்சன் நீலக் காசினால் திருந்தச் செய்த,
ஈவது தெரியா உள்ளத்து இராக்கதர் ஈட்டி வைத்த
பாவ பண்டாரம் அன்ன செய் குன்றம் பலவும் பாராய்!

பொருள் · Meaning in Tamil

காவலன் பயந்த வீரக் கார்முகக் களிறே ! - தசரத மன்னன் பெற்ற வீரமிக்க வில் ஏந்தும் யானை போன்றவனே! கற்ற தேவர்தம் தச்சன் - கல்வியிற் சிறந்த தேவர்களின் தச்சனான விசுவகன்மாவினால்; நீலக் கல்லினால் திருந்தச் செய்தது - நீல மணிக்கற்களினால் செப்பமுறச் செய்யப் பெற்றனவும்; ஈவது தெரியா உள்ளத்து இராக்கதர் - ஈகை என்பதனையே அறியாத உள்ளமுடைய அரக்கர்கள்; ஈட்டி வைத்த - திரட்டி வைத்த; பாவ பண்டாரம் அன்ன - பாவத்தின் சேமிப்புக் கிடங்குகளைப் போன்ற; செய்குன்றம் பலவும் பாராய் - செய்குன்றங்கள் பலவற்றையும் காண்பாயாக.

கார்முகம் - வில். காவலன் பயந்த வீரக் கார் முகக் களிறு - இல்பொருள் உவமை. ஈகை - மன இரக்கத்தின் அடிப்படையில் எழும் அறம். ஆதலால் "இரக்கம் என்று ஒரு பொருள் இலாத நெஞ்சினர்” (கம்ப.) ஆகிய அரக்கர் ஈவது தெரியா உள்ளத்தினர் ஆயினர் ஈயாமல் அரக்கர் ஈட்டிய செல்வம் எல்லாம் அவர் பாவ பண்டாரத்தில் திரள்கின்றன என்று அழகுற மொழிந்தார் பாவத்தின் நிறம் கருமையாதலின், நீலக்கற்களால் ஆன செய்குன்றங்களைப் பாவ பண்டாரம் எனப் பொருத்தமுற மொழிந்தார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Warrior elephant with a bow, son of the king! All around,
  2. made finely by the craftsman of the gods out of dark-blue gems,
  3. like treasuries of sin heaped up by demons whose hearts know nothing of giving,
  4. look at the many pleasure-hills!'

What the poem says

Irāmaṉ points out the artificial hills in the city's gardens, built by Viśvakarmā, the architect of the gods, out of dark-blue gemstone.

Their dark colour suggests sin, which is traditionally black. The demons never give anything away, since giving springs from compassion and they have none. So the hills look like storehouses where all their hoarded sins have piled up. Calling Ilakkuvaṉ a warrior elephant with a bow is a fanciful comparison, since no real elephant carries a bow.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘kāvalaṉ payanta vīrak kārmukak kaḷiṟē! cuṟṟa
tēvartam taccaṉ nīlak kāciṉāl tiruntac ceytatu,
īvatu teriyā uḷḷattu irākkatar īṭṭi vaitta
pāva paṇṭāram aṉṉa ceykuṉṟam palavum pārāy!