கம்பராமாயணம் 6899 · யுத்த 9.46

Section யுத்த காண்டம் / 9. இலங்கை காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பிணை மதர்த்து அனைய நோக்கம் - களிப்பேறியது போன்ற அழகிய பார்வை; பாழ் பட- பொலிவு கெட; பிடியுண்டு - (அரக்கராற்) சிறையிடப் பெற்றதனால்; அன்பின் துணைவரைப் பிரிந்து போந்து - அன்பிற்குரிய தம் கணவன்மார்களைப் பிரிந்து வந்து; மருங்கு எனத் துவளும் உள்ளம் - இடை போல வருந்தும் மனத்தையும்; பணம் அயிர்ப்பு எய்தும் அல்குல் பாவையர் - பாம்பின் படமோ என்று ஐயுறத்தக்க நிதம்பத்தையுமுடைய (தேவ) மாதர்கள்; பருவம் நோக்கும் - (தம் வாட்டம் போக்கும்) கார் காலத்தினை (விருப்புடன் எதிர்நோக்கும், கணமயில் குழுவின் - திரண்ட மயில்களின் கூட்டம் போல; நம்மைக் காண்கின்றார் தம்மை நோக்காய் - நம்மை (விருப்பத்தோடு) எதிர்நோக்குகின்றார்கள்; அவர்களை (நீயும்) காண்பாயாக.

மதர்த்தல்-களித்தல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Their glances, once like a proud doe's, now ruined; seized, and from
  2. the husbands they love torn away and brought here, with hearts that droop like their slender waists,
  3. the doll-like women, whose hips make one think of a cobra's hood — like a flock
  4. of peacocks watching for the rains, they are gazing at us; see them!'

What the poem says

Irāmaṉ points out the women watching from the rooftops. They are the wives of gods and others whom the demons carried off and imprisoned. Separated from their husbands, they have lost the brightness of their eyes, and their hearts are as thin and drooping as their waists.

Now they gaze at Irāmaṉ's army the way peacocks watch for the monsoon clouds, which bring them joy. For these captives, the army means rescue.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘piṇai matarttaṉaiya nōkkam pāḻpaṭa, piṭiyuṇṭu, aṉpiṉ
tuṇaivaraip pirintu pōntu, maruṅku eṉat tuvaḷum uḷḷap
paṇam ayirppu eytum alkul pāvaiyar, paruvam nōkkum
kaṇa mayil kuḻuviṉ, nammaik kāṇkiṉṟār tammaik kāṇāy!