கம்பராமாயணம் 6900 · யுத்த 9.47

Section யுத்த காண்டம் / 9. இலங்கை காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
‘
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘நாழ் மலர்த் தெரியல் வீர! நம் படை காண, வானத்து
யாழ் மொழித் தெரிவை மாரும் மைந்தரும் ஏறுகின்றார்,
‘வாழ்வு இனிச் சமைந்தது அன்றே ‘ என்று மா நகரை எல்லாம்
பாழ் படுத்து இரியல் போவார் ஒக்கின்ற பரிசு பாராய்!

பொருள் · Meaning in Tamil

நாள் மலர்த் தெரியல் வீர் ! - அன்றலர்ந்த மலர்களால் ஆன மாலையணியும் மார்புடையானே! நம் பலம் காண்பான் - நமது வலிமையைக் காணும் பொருட்டு; யாழ் மொழித் தெரிவைமாரும் மைந்தரும் - யாழ் போன்ற மொழி பேசும் (தேவ) மகளிரும் ஆடவரும்; மாடத்து ஏறுகின்றார் வாழ்வு இனிச் சமைந்தது அன்றே! - மாடங்களில் ஏறுகின்றார் "நமக்கு இனி நல்வாழ்வு அமைந்து விட்டதன்றோ!; என்று மாநகரையெல்லாம் - எனக்கருதி, இலங்கை மாநகரை எல்லாம்; பாழ் படுத்து - பாழாகப் போட்டுவிட்டு; இரியல் போவார் - ஓடிப் போவாரை ஒக்கின்ற பரிசு பாராய்! -போன்ற தன்மையைக் காண்பாயாக!

இலங்கையின் பணிகள் யாவும் தேவர்கள் புரிவதால், இவர்கள் வெளியேறின் இலங்கை பாழ்படும் என்பார் "பாழ்படுத்து இரியல் போவார்” என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'You whose chest wears a garland of fresh flowers! To see our strength, onto the mansions
  2. women whose speech is sweet as the yāḻ, and men, are climbing;
  3. "Now our good life is at hand," they think, and the whole great city
  4. they seem ready to leave in ruins as they flee — look at that!'

What the poem says

Captive gods and goddesses, who do all the work of Ilaṅkai, climb onto the roofs to look at Irāmaṉ's army. They think their deliverance has come, and they look as if they are ready to abandon the city.

The yāḻ is the ancient Tamil harp, and voices compared to it are sweet. Since the captives run the whole city, their leaving would ruin it, which is why the poet says they will leave it desolate.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘nāḷmalart teriyal mārpa! nam palam kāṇpāṉ, māṭattu
yāḻ moḻit terivaimārum maintarum ēṟukiṉṟār,
‘vāḻvu iṉic camaintatu aṉṟē ‘ eṉṟu mā nakarai ellām
pāḻpaṭuttu iriyal pōvār okkiṉṟa paricu pārāy!