கம்பராமாயணம் 6903 · யுத்த 10.2

Section யுத்த காண்டம் / 10. இராவணன் வானரத் தானை காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பொலிந்த தாம் இனிது போர் எனலோடும்
மலிந்த நங்கை எழிலால் வலி நாளும்
மெலிந்த தோள்கள் வடமேருவின் மேலும்
வலிந்து செல்ல மிசை செல்லும் மனத்தான்.

பொருள் · Meaning in Tamil

நலிந்த நங்கை எழிலால்- (இராமன் பிரிவால்) வருந்தி மெலிந்துள்ள சீதையின் அழகால், நாளும் வலி மெலிந்த தோள்கள் - நாளுக்கு நாள் வலிமை தளர்ந்த, (இராவணன் புயங்கள்; போர் எனலோடும் - போர் (வந்து விட்டது) என்றவுடனே; இனிது பொலிந்தது ஆம் - மகிழ்ச்சியால் மேலும் உயர்ந்து விளங்கியன ஆயின; வடமேருவின் மேலும் - வடக்குத் திசைக்கண் உள்ள மேருமலையின் மேலும்; வலிந்து செல்ல - வலியப் போர்க்குச் செல்ல; மிசை செல்லும் மனத்தான் - உந்துகின்ற உள்ளத்திண்மையுடையவன் ஆனான் அவன்.

பொலிதல்-முன்னிலும் மேம்பட்டு விளங்குதல். இராமனுக்காக அந்நங்கை மெலிந்தாள்; அந்நங்கைக்காக இவன் மெலிந்தான் என்பது ஒரு நயம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They swelled with joy the moment 'war' was spoken —
  2. his shoulders, whose strength had wasted day by day through the beauty of the pining lady,
  3. shoulders grown thin; even onto northern Mēru
  4. his heart would climb, forcing its way to fight.

What the poem says

Irāvaṇaṉ's arms had grown thin from lovesickness for Cītai, who is herself wasting away in grief at being parted from Irāmaṉ. But as soon as he hears that war has come, his shoulders swell again with joy.

He feels ready to force his way up even Mount Mēru. The commentary notes the symmetry: she grows thin for Irāmaṉ, and he grows thin for her.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1polintatām iṉitu pōr eṉalōṭum
nalinta naṅkai eḻilāl vali nāḷum
melinta tōḷkaḷ vaṭamēruviṉ mēlum
valintu cella micai cellum maṉattāṉ.