கம்பராமாயணம் 691 · பால 10.139
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
முனியும் - கோசிக முனிவனும்; தம்பியும் - இலக்குமணனும்; போய் - சென்று; முறையால் - வழக்கப்படியே; தமக்கு இனிய - தத்தமக்கு இனிமையான; பள்ளிகள் - படுக்கையிடங்களை; எய்திய - அடைந்த; பின் - பின்பு; இருள் கனியும் - இருள் மயமான கனியை; போல்பவன் - ஒப்பவனான இராமபிரான்; கங்குலும் - இரவும்; திங்களும் - சந்திரனும்; தனியும் - தனிமைப்பாடு என்ற ஒன்றும்; தானும் - தானும்; அத் தையலும் - அச் சீதையாக; ஆயினான் - ஆனான்.
இரவில் நிலா வீசும்பொழுது இராமன் தனியனாகத் தான் இருந்த நிலையில் சீதை பற்றிய சிந்தனையே ஆகி அவளை உருவெளிப்பாட்டில் கண்டு காதல் மயக்கமுற்றுத் துயிலின்றி இருந்தான் என்பது கருத்து. இருள்கனி: கருநிறத்தாலும், யாவராலும் விரும்பப்படுவதாலும் இது இராமனுக்கு உவமையாயிற்று. இருள்கனியும்: உம்மை இசைநிறை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When the sage and his brother had gone and, as was proper, reached
- their pleasant beds, he who was like a fruit of darkness
- was left with the night, the moon,
- his loneliness, himself — and that young woman.
What the poem says
The poet now returns to Irāmaṉ on the same night. Vicuvāmittiraṉ and Ilakkuvaṉ retire to sleep, and Irāmaṉ, dark and desirable as a ripe black fruit, is left alone with the night, the moon, his solitude and the image of Cītai. The commentary explains that, thinking of nothing but her, he sees her form before him and cannot sleep.