கம்பராமாயணம் 6912 · யுத்த 10.11

Section யுத்த காண்டம் / 10. இராவணன் வானரத் தானை காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அம்கை - அழகிய கைகளால்; கல்லில் - அகழ்ந்தெடுப்பது என்றால்; உலகம் கவர்கிற்போர் - உலகங்களையே கவர்ந்தெடுக்க வல்லவரும்; நல் இலங்கை முதலோர் - அழகிய இலங்கைக்கு முதற்குடி மக்களாய் தொன்று தொட்டு வாழ்பவரும்; நவை இல்லோர் - (தம் மன்னனுக்கு) எந்தக் குற்றமும் புரியாதவரும்; சொல்லில் - எண்ணிக் கூறுமிடத்து; அங்கு ஒர்சத கோடி தொடர்ந்தோர் - அங்கே, ஒரு நூறு கோடியர் எனத் தொடர்பவரும்; வில் இலங்கு படையோர் - வில்கள் (தோளில்) மின்ன வருகிற) படை வீரர்கள்; புடை விம்ம - இருமருங்கும் புடை சூழவும்...

கல்லில் தோண்டினால்... இலங்கையிலுள்ள படையரக்கர்களின் பெருமை கூறியவாறு "ஒருவரே வல்லவர்: ஓர் உலகத்தினை வெல்ல” (9310) என்பர் மேலும். அரக்கர் உலகுக்குப் பெருங்குற்றங்கள் பல இழைப்பவர் ஆயினும், படைவீரர் என்ற முறையில், தம் தலைவனுக்கு எக்குற்றமும் இழையாமல் போர் புரிபவர் ஆதலின் "நவை இல்லார்” என்றார் நவை-குற்றம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Those who, if they dug with their fine hands, could carry off the world,
  2. the first people of fair Ilaṅkai, faultless in their loyalty,
  3. who, when counted, followed on by the hundred crore —
  4. the soldiers with gleaming bows thronged on every side.

What the poem says

Another host of a hundred crores surrounds Irāvaṇaṉ. These are the ancient native families of Ilaṅkai, strong enough to dig up and carry off the earth with their hands. Elsewhere the epic says that any one of them could conquer a world.

They are called faultless. The demons do great wrong to the world, but as soldiers they never betray or fail their own king.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kallil am kai ulakam kavarkiṟpōr
nal ilaṅkai mutalōr navai illōr
collil aṅku or catakōṭi toṭarntōr
vil ilaṅku paṭaiyōr puṭai vimma.