கம்பராமாயணம் 6914 · யுத்த 10.13
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நஞ்சும் அஞ்சும் விழி - விடமும் அஞ்சவல்ல விழிகளையுடைய; நாகியர்- நாக உலக மங்கையர்களும்; நாண- வெட்கமுற்று; வஞ்சி அஞ்சும் இடை மங்கையர் - வஞ்சிக்கொடியும் அஞ்சவல்ல இடையினையுடைய (வித்தியாதரப்) பெண்டிரும்; இன்சுவை அஞ்சொல் வானத்து அரம்பையர் - இனிய சுவையோடு கூடிய அழகிய சொற்களை மொழியும் தேவமாதரும்; பஞ்சமம் சிவணும் இன்இசை - பஞ்சமப் பண் போன்ற இனிய இசையினை; ஆடிப் பாட - ஆடலோடு கூடப் பாடி இசைக்கவும்...
நாகியர் - நாக உலகத்துப் பெண்கள். அரம்பையர் - வான் உலகத்து மகளிர் மூவுலகத்து அழகியரும் இராவணன் கால்களைச் சுற்றி ஆடிப்பாடிக் காலங் கழிக்கின்றனர் என்று அவன் ஆட்சியும் மாட்சியும் தெரிவித்தவாறு. பஞ்சமம் - எழுவகைப் பண்களில் ஒன்று. சிவணல்-ஒத்தல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Nāga women, whose eyes even poison would fear, shy and modest;
- maidens whose waists even the slender vañci creeper fears; and in heaven
- the Arampaiyar of lovely, sweet-tasting speech — dancing,
- they sang sweet songs that matched the pañcamam mode.
What the poem says
Women of three worlds entertain Irāvaṇaṉ: serpent-maidens from the underworld, whose eyes are deadlier than poison; Vidyādhara women, with waists more slender than the vañci creeper; and the dancers of heaven.
They dance and sing in pañcamam, one of the seven melodic modes. The point is that the beauties of every world spend their days dancing at his feet, which shows the reach of his power.