கம்பராமாயணம் 6915 · யுத்த 10.14

Section யுத்த காண்டம் / 10. இராவணன் வானரத் தானை காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நஞ்சு கக்கி எரிகண்ணினர் - விடம் உமிழ்ந்து, எரிகின்ற கண்களையுடையவரும்; கதை பற்றிய கையர் - கதாயுதத்தைப் பற்றியுள்ள கரங்களையுடையவரும்; மஞ்சு உகக் குமுறு சொல்லினர் - மேகமும் அஞ்சி வீழும்படியான குமுறி ஒலிக்கும் சொற்களையுடையவரும்; கிஞ்சுகத்த வல்வாய் - முருக்க மலர் போன்ற பெரிய சிவந்த வாய்களையுடைய; கிரி ஒத்தனர் - மலைகளை ஒத்தவரும் ஆகிய; நாமக் கஞ்சுகத்தர் - அச்சந்தரும் சட்டையணிந்த மெய்க்காவலர்கள்; சுற்ற - சுற்றிக் கொண்டே இருக்கவும்...

கஞ்சுகம் - சட்டை, கதை - தண்டு. கிஞ்சுகம்- முருக்கமலர்.. ஊன் உண்பவர் ஆகிய அரக்கருக்கு குருதி தோய்ந்த வண்ணம் உள்ள உதடுகள் உடைமை பற்றி, "வல்வாய்க் கிஞ்சுகத்த” என்றார். சிவந்த வாயையுடைய மலைபோன்றவர்-இல் பொருள் உவமை. நாமம்-அச்சம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With eyes that spit poison and blaze, in dreadful
  2. coats of mail, with maces gripped in their hands,
  3. with voices that rumble till the clouds fall, with strong mouths
  4. red as kiñcukam flowers, like mountains, they surrounded him.

What the poem says

Irāvaṇaṉ's bodyguards stand around him like mountains. They wear fearsome armour, carry maces, and their eyes flash fire. Their thundering voices could knock down the clouds.

Their mouths are red like the flame-of-the-forest (kiñcukam) flower, because they eat raw flesh and their lips are stained with blood. A mountain with a red mouth is a deliberately impossible image.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nañcu kakki eri kaṇṇiṉar nāmak
kañcukattar katai paṟṟiya kaiyar
mañcu ukak kumuṟu colliṉar val vāyk
kiñcukattar kiri ottaṉar cuṟṟa.