கம்பராமாயணம் 6917 · யுத்த 10.16
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வேத்திரத்தர் - (கைகளிற்) பிரம்பினை ஏந்தியவரும்; எரிவீசி விழிக்கும் நேத்திரத்தர் - தீயுமிழுமாறு பார்க்கும் கண்களையுடையவரும்; இறை நின்றுழி நில்லாக் காத்திரத்தர் - சிறிது நேரம்கூட நின்ற இடத்திலேயே நில்லாமல் (உலவிக் கொண்டேயிருக்கும்) உடம்பினையுடையவரும், மனை காவல் விரும்பும் சூத்திரத்தர்- அரண்மனைக் காவலுக்கு விரும்பியேற்க வல்ல உபாயங்கள் அறிந்தவரும், பதினாயிரர் சுற்ற - பத்தாயிரம் பேர் சுற்றிக் காவல் புரியவும்...
வேத்திரம்- பிரம்பு. காத்திரம்- உடல். அரண்மனை வாயிற்காவலர்கள் நின்ற இடத்து நில்லாமல் நடந்த வண்ணம் பணிபுரிபவர் ஆதலின், "இறை நின்றுழி நில்லாக் காத்திரத்தர்" என்றார். இறை-சிறிது சூத்திரம்-உபாயம், நுட்பம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Bearing canes, with eyes that glare
- throwing out fire, with bodies that never stand still
- even a moment where they stand, skilled in the craft
- of guarding the palace — ten thousand of them surrounded him.
What the poem says
Ten thousand palace guards attend Irāvaṇaṉ. They carry canes, their eyes blaze, and like good sentries they never stand still but keep patrolling. They know every trick of guarding a royal household.
This ends the long description of Irāvaṇaṉ's majesty on the tower. The next verses turn to the moment he catches sight of Irāmaṉ.