கம்பராமாயணம் 6918 · யுத்த 10.17
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தோரணத்த மணிவாயில் மிசை - தோரணங்களோடு மணிகள் பதித்துள்ள கோட்டை வாயில் கோபுரத்தின் மேல்; சூல் நீர் அணைத்த முகில் ஆம் என -கருவாக நீரினை உட்கொண்டுள்ள கருமேகம் என்னுமாறு; நின்றான் - நின்றவனாகிய இராவணன்; ஆரணத்தை - நான் மறைகளின் வடிவு கொண்டவனை; அரியை - (அம்மறைகளின் நாயகனான) திருமாலை; மறை தேடும் காரணத்தை - அம்மறைகள் முழுதும் அறிய இன்னும் தேடிக் கொண்டிருக்கும் காரணப்பொருளை (இராமபிரானை) நிமிர் கண்கொடு கண்டான் - (ஆணவம்) ஓங்கிய தன் விழிகளால் பார்த்தான்.
இராவணன், இராமபிரானை முதன்முதலாகச் சந்திக்கும் சந்திப்பு ஆதலால், ஆர்வம் குமிழியிட, "ஆரணத்தை, அரியை, மறை தேடும் காரணத்தை” என அடுக்குகின்றார் கவிஞர் பிரான். இராமபிரானை, வீடணன் சந்தித்த போதும், இவ்வாறே உவகை மிகக்கூர்வார். (6493-98) ஆதலின் "நிமிர் கண் கொடு கண்டான்" என்றார். கொடு-கொண்டு என்பதன் விகாரம். கண்டான் எனவே போதுமாயினும் 'கண்கொடு' என்றது அவன் கண் பெற்ற பேற்றினைச் சுட்டியதாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Upon the jewelled gateway hung with festoons he stood, like a
- cloud that holds water heavy within it;
- the Veda itself, Hari, the First Cause the scriptures still go seeking —
- him he saw, with eyes held high.
What the poem says
This is the first time Irāvaṇaṉ sees Irāmaṉ. He stands dark and huge on the gate-tower, like a rain-heavy cloud, and looks with proud, lifted eyes at the one the poet names three times over: the Veda in person, Hari (Viṣṇu), and the First Cause that the Vedas are still searching for.
The poet piles up these titles out of excitement at the moment of meeting. He did the same when Vīṭaṇaṉ first saw Irāmaṉ. Saying that Irāvaṇaṉ 'saw with his eyes' hints that his eyes had a privilege, whatever his heart made of it.