கம்பராமாயணம் 6919 · யுத்த 10.18

Section யுத்த காண்டம் / 10. இராவணன் வானரத் தானை காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மடித்த வாயினன்; வழங்கு எரி வந்து
பொடித்து இழிந்த விழியன்; அது போழ்தின்
இடித்த வன்திசை; எரிந்தது நெஞ்சம்;
துடித்த கண்ணினொடு இடத் திரள் தோள்கள்.

பொருள் · Meaning in Tamil

மடித்த வாயினன் - (இராமபிரானைக் கண்ட இராவணன் எழுந்த வெகுளியால்) உதட்டைக் கடித்த வாயினன் ஆனான்; வயங்கு எரி வந்து - ஒளிர்கின்ற சினத்த தோன்றி; பொடித்து இழிந்த விழியன் - சிறுசிறு பொறிகளாய் விழுகின்ற கண்களையுடையவன் ஆனான்; அது போழ்து - அப்பொழுது, வன்திசை இடித்த - வலிய திசைகளில் அவன் சின ஆவேசத்தால் இடி போன்ற ஒலி உண்டாயிற்று; நெஞ்சம் எரிந்தது - (சினத்தால்) அவன் உள்ளம் பற்றி எரிந்தது; கண்ணினோடு - அவன் கண்களோடு சேர்ந்து; இடத்திரள் தோள்கள் - இடப்பக்கத்தே திரண்ட அவன் பத்துத் தோள்களும்; துடித்த - துடித்தன.

துடித்த -அன்சாரியை பெறாத பலவின்வினை. வாய் மடித்தல்- உதடு கடித்தல். சினத்தின் மெய்ப்பாடு. "மடித்த பில வாய்கள் தொறும் வந்து புகை முந்த" (3115) சினத்தால் அவன் கண்கள் உலைக்களமாக, தீப்பொறிகள் சிந்தின என்று அவன் வெகுளியின் உச்சம் விளம்பினார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He bit his lips; a blazing fire came
  2. and fell in sparks from his eyes; at that moment
  3. a mighty sound thundered out; his heart burned;
  4. and with his eyes, his massed shoulders on the left side throbbed.

What the poem says

Irāvaṇaṉ's reaction to the sight of Irāmaṉ is pure rage. He bites his lips, sparks fly from his eyes as from a forge, a thunderous sound breaks out, and his heart burns.

His left eyes and his ten left shoulders twitch. In Indian tradition a throbbing on the left side of a man's body is an omen of misfortune.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṭitta vāyiṉaṉ; vaḻaṅku eri vantu
poṭittu iḻinta viḻiyaṉ; atupōḻtiṉ
iṭitta vaṉ icai; eṟintatu neñcam;
tuṭitta kaṇṇiṉoṭu iṭat tiraḷ tōḷkaḷ.