கம்பராமாயணம் 6921 · யுத்த 10.20

Section யுத்த காண்டம் / 10. இராவணன் வானரத் தானை காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘ஏனையோன் இவன் இராமன் எனத் தன்
மேனியே செய்கின்றது; வென்றிச்
சேனை வீரரையும் தெரிக்(க) ‘என்று
தான் வினாவ எதிர் சாரன் விளம்பும்.

பொருள் · Meaning in Tamil

ஏனையோன் இவன்- (மற்றவர்களிடமிருந்தும்) வேறுபட்டவனாகத் தோன்றுகிறவனான இவன்; இராமன் எனத்தன் மேனியே உரை செய்கின்றது - இராமன் என்று அவன் உடலின் தோற்றமே பேசுகின்றது; வேறு இச்சேனை வீரர் - (ஆகவே இவனைப் பற்றி உரைப்பதை விட்டு விட்டு) மற்ற படைவீரர்களினுடைய; படையைத் தெரி என்று - படைப் பெருமையைப் பற்றித் தெரிவிப்பாயாக என்று; தான் வினாவ - இராவணன் கேட்க; சாரன் விளம்பும் - சாரன் மறுமொழி கூறுவான்.

எம் பெருமான் திருமேனி, அன்பர் ஆவோர்க்கு உள்ளம் உருகவைக்கும்; கண்ணீர் பெருக வைக்கும்; அன்பர் அல்லார்க்கு சீற்றம் பெருக வைக்கும்; உதடு கடிக்கவைக்கும்; நெஞ்சம் எரிய வைக்கும்; பார்க்கக் கூச வைக்கும் என்பதனை மேற்பாடலாலும் இப்பாடலாலும் கவிஞர் பிரான் உணர வைத்தார் பெருமான் திருமேனி அன்பனான அநுமனையும் வீடணனையும் உருக வைத்தமை. "பெருமான் குண அழகாலே அன்பரைக் கூட்டும்; மேனி அழகாலே பகைவரை வாட்டும்” என்பதாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'This other one is Irāmaṉ — his very
  2. body declares it; now tell me of the might
  3. of the warriors in this army,' he said;
  4. and when he had asked, Cāraṉ answered.

What the poem says

Irāvaṇaṉ needs no one to tell him which one is Irāmaṉ; his form makes it obvious. He asks his spy Cāraṉ to name the other leaders of the army instead.

The commentary observes that the Lord's form melts the hearts of devotees like Aṉumaṉ and Vīṭaṇaṉ and brings them to tears, while in enemies it stirs rage. His virtues draw lovers to him; his beauty torments his foes.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘ēṉaiyōṉ ivaṉ irāmaṉ eṉat taṉ
mēṉiyē uraiceykiṉṟatu; vēṟu ic
cēṉai vīrar paṭaiyait teri ‘eṉṟu
tāṉ viṉāva etir cāraṉ viḷampum.