கம்பராமாயணம் 6922 · யுத்த 10.21

Section யுத்த காண்டம் / 10. இராவணன் வானரத் தானை காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
“
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘இங்கு இவன் “படை இலங்கையர் மன்னன்
தங்கை “ என்னலும் முதிர்ந்த சலத்தால்
அங்கை வாள்கொடு அவள் ஆகம் விளங்கும்
கொங்கை நாசி செவி கொய்து குறைத்தான்.

பொருள் · Meaning in Tamil

இங்கு இவன் - (சாரன் இலக்குவனைச்சுட்டிக்காட்டி) இதோ காணும் இவன்; "படை இலங்கையர் மன்னன் தங்கை" என்றலும் - படை வலிமை மிக்க இலங்கையர் வேந்தன் இராவணன் தங்கை என்று கேட்டவுடனே; முதிர்ந்த சலத்தால் - முற்றிய கோபத்தால்; அங்கை வாள் கொடு - அழகிய கையில் வாளை ஏந்தி; அவள் ஆகம் விளங்கும் கொங்கை - உன் தங்கை சூர்ப்பனகையின் மார்பில் விளங்கிய தனங்களையும்; நாசி, செவி கொய்து குறைத்தான் - மூக்குடன் காதுகளையும் வெட்டி வீழ்த்திய இலக்குவன் ஆவான் (என்றான்.

சலம்-தணியாச் சினம், ஆறாக்கோபம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'This one here — the moment she said, "Sister of the king of Ilaṅkai's armies,"
  2. in his ripened fury,
  3. with a sword in his fair hand, the breasts that graced her body,
  4. her nose and her ears, he cut away and maimed her.'

What the poem says

Cāraṉ begins naming the warriors, starting with Ilakkuvaṉ. This is the man who, as soon as Cūrppaṇakai introduced herself as Irāvaṇaṉ's sister, drew his sword in fury and cut off her nose and ears.

The reminder is pointed. That mutilation set in motion everything that followed, including the abduction of Cītai and the war now at Irāvaṇaṉ's gates.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘iṅku ivaṉ “paṭai ilaṅkaiyar maṉṉaṉ
taṅkai “ eṉṟalum mutirnta calattāl
aṅkai vāḷkoṭu avaḷ ākam viḷaṅkum
koṅkai nāci cevi koytu kuṟaittāṉ.