கம்பராமாயணம் 6926 · யுத்த 10.25

Section யுத்த காண்டம் / 10. இராவணன் வானரத் தானை காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நடந்து நின்றவன் - அங்கே நடந்து கொண்டிருப்பவன்; நகும் கதிர் முன்பு தொடர்ந்தவன் - ஒளிர்கின்ற சூரியனை (கனியென்ற கருதிப்) பின் தொடர்ந்தவன்; உலகு சுற்றும் எயிற்றின் - உலகை வளைந்த பற்களால்; இடந்து எழுந்தவனை ஒத்தவன் - அகழ்ந்து எடுத்துக்கொண்டு வந்த வராக மூர்த்தியாகிய திருமாலைப் போன்றவன்; வேலை கடந்தவன் - கடலைக் கடந்து (இலங்கைக்கு) வந்தவன் ஆகிய அநுமன்; சரிதை கண்டனை - அவன் சரிதத்தை நீ கண்ணாரக் கண்டறிந்துள்ளவன் அல்லவா?

மேல், (6882) 'இராமன் கைகளால் தொடுமாறு நின்று கொண்டிருப்பவன்' என்று சுக்கிரீவனைச் சுட்டிக் கூறினார் இங்கும் நடந்து கொண்டு காவல் புரிந்த வண்ணம் உள்ள அனுமன் செயலைச் சுட்டினார். நிகழ்வுகளை அறிமுகம் செய்யுந்திறத்தால் கதை மாந்தர்களை மனத்திரை முன் கொண்டு வந்து நிறுத்தும் நாடகப் பாங்கு போற்றுதற்குரியது. பாத்திரங்களின் நிலைகளுக்கேற்ப வருணனையும் பொருந்தி வருகிறது. திருமகளாகிய சீதையை மீட்க அனுமன் செல்வது அன்றைய திருமால் செயலுக்கு ஒப்பாதலால் 'இடந்தெழுந்தவனை ஒத்தவன்” என்பது பொருந்தும் உவமையாதல் உணர்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The one walking there once chased the shining sun
  2. before him; he is like him who, with the tusk that encircles the world,
  3. dug it up and rose; the one who crossed the sea —
  4. you have seen his story for yourself, have you not?'

What the poem says

Cāraṉ points out Aṉumaṉ, who is walking about keeping watch. As a baby he leapt at the rising sun, thinking it was a fruit. He is compared to Viṣṇu in his Boar form, who dug the earth up from the depths of the sea on his tusk.

The comparison fits. Just as the Boar rescued the Earth goddess, Aṉumaṉ crossed the sea in search of Cītai, who is the goddess Lakṣmī. And Irāvaṇaṉ needs no description of him, since he has seen what Aṉumaṉ did in Ilaṅkai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘naṭantu niṉṟavaṉ nakum katir muṉpu
toṭarntavaṉ; ulaku cuṟṟum eyiṟṟiṉ
iṭantu eḻuntavaṉai ottavaṉ; vēlai
kaṭantavaṉ caritai kaṇṭaṉai aṉṟē.