கம்பராமாயணம் 6927 · யுத்த 10.26
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நின்றவன் நீலன்- இதோ இங்கு நிற்கிற இவன் நீலன்; நெருப்பின் மகன் - தீக்கடவுளாகிய அக்கினியின் புத்திரன்; திண் சூலமும் கயிறும் - திண்ணிய சூலாயுதமும் பாசக் கயிறும்; இன்மை துணிந்தும் - இவன் கைகளில் இல்லாமையைத் துணிவாக அறிந்திருந்தும்; இவனைக் கருதாதார் - இவனைப் பற்றி இவன் பகைவர்கள்; அடும்திறல் மிக்கான் ஆலம் உண்டவன் - சங்காரம் செய்வதில் வல்லோனாகிய நஞ்சுண்ட கண்டனாய் விளங்கும் சங்கார மூர்த்தியாகிய சிவபிரான் (என்றும்), காலன் என்பர் - இயமன் என்றும் கூறுவர்
கயிறு-பாசக் கயிறு. பாசம் என்பதே கயிறாயினும் பாசக்கயிறு என்னும் வழக்கால் இயமனின் படையைக் குறித்தது. சூலம் இன்மை துணிந்தும் ஆலம் உண்டவன் என்றும், கயிறு இன்மை துணிந்தும் காலன் என்றும் இவனை இவன் பகைவர் கருதுவர் என்று நிரல் நிறையாகப் பொருள் கொள்க. இதனால் சூலமும் கயிறும் இன்றியே அவற்றிற்குரியார் புரியும் வீரம் விளைப்பவன் நீலன் என்பது கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The one standing there is Nīlaṉ, son of Fire; though they know for certain
- that he carries no strong trident and no noose,
- they call him the poison-drinker, mighty in destruction,
- and Kālaṉ, Death — those who are his foes.'
What the poem says
Nīlaṉ, the monkey commander, is the son of the Fire-god. He carries neither Śiva's trident nor Yama's noose, yet his enemies call him Śiva the destroyer, who drank the cosmic poison, and Kālaṉ, the god of death.
The two weapons and the two gods are matched in order: no trident yet called Śiva, no noose yet called Death. The point is that he does what those gods do without their weapons.