கம்பராமாயணம் 6929 · யுத்த 10.28
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கரடிக்கு அரசு ஆகிநின்றான் - (அதேற) கரடிகளுக்கு எல்லாம் தலைவன் ஆகி நிற்கின்ற அவன் சாம்பன். முக்காலமும் மொய்ம் மதியால் முறையின் உணர்வான் - (அவண்) (இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும்) மூன்று காலங்களையும் நிறைந்த அறிவால் முறையே உணர்ந்து சொல்லவல்லவன்; புக்கு ஆலம் எழ - உட்புகுந்து நஞ்சு எழுமாறு; புணரி புலவோர் கலக்கும் - கடலைத் தேவர்கள் கலக்கிய; அக்காலம் உள்ளான் - அந்தக் காலத்திலேயே (அவண்) இருந்தவன்; இக்காலம் நின்றும் - இவ்வளவு காலம் வாழ்ந்திருந்தும் (இப்போதும்); உலகு ஏழும் எடுக்க வல்லான் - ஏழு உலகங்களையும் பெயர்த்தெடுக்கும் வல்லமை வாய்ந்தவன்.
சிலர்க்கு இறந்தகாலம் மறந்து போய் நிகழ்காலமே நினைவில் நிற்கும். பலருக்கும் எதிர்காலம் இப்படி இருக்கும் என முற்றிலும் தெரியாது. சாம்பனுக்கோ முக்காலமும் உணரும் நிறைமதியுண்டு என அவன் அறிவுத் திறம் உரைத்தது. கடல் கடைந்த அன்றே இருந்தவன். அவனுக்கு யுகம் கடந்தும் பலம் கடவாத உடல் திறமும் உண்டு என சாம்பனின் அறிவு உடல் என இருதிறமும் உரைத்தவாறு. முக்காலம் உணர்தலை அறிவன் வாகை என்பர் மொய்ம்மதி-நிறையறிவு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He who knows all three times in their order through his full mind,
- who was there in that age when the gods churned the sea and the poison rose,
- stands as king of the bears;
- even now, after so long, he could lift all seven worlds.
What the poem says
Cāraṉ points out Cāmpaṉ (Jāmbavān), king of the bears. He is wise enough to know the past, the present and the future. He is so old that he was already alive when the gods churned the ocean, and yet after all those ages he still has the strength to lift the seven worlds.
The verse praises him for both wisdom and bodily strength.