கம்பராமாயணம் 6930 · யுத்த 10.29

Section யுத்த காண்டம் / 10. இராவணன் வானரத் தானை காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சேனாபதி தன் அயலே - சேனாதிபதியாகிய நீலன் அருகிலே; இருள் செய்த குன்றின் மருங்கே ஆனா - இருண்ட நிறமுடைய குன்றின் பக்கத்தே நீங்காமல் (நிற்கும்); இரண்டு ஆடகக் குன்றின் நின்றார் - இரண்டு பொற்குன்றுகள் போல நிற்கின்ற அவ்விருவரும், ஏனோரில் - சேனையிலிருக்கும் பிறருக்குள்ளே; இராமன் இலக்குவன் என்னும் ஈட்டார்- இராமலக்குவர் போன்ற வலிமையுடையவர்கள்; வானோர் தம் மருத்துவர் மைந்தர்- தேவர்களுடைய மருத்துவர்களாகிய அசுவினி தேவர்களின் குமாரர்கள்; வலிக்கண் மிக்கார் - வலிமையில் மிகுந்தவர்கள்.

கருநிறமுடைய நீலனின் அருகில் பொன்னிறமுடைய அசுவினி தேவரின் மைந்தர்கள் இருவரும் நிற்பது நீலமலைக்கருகே இரண்டு பொன் மலைகள் நிற்பது போன்றிருந்தது என்பதாம். மேல், நீலனைக் குறிக்கையில் அவன் வானரப்படையின் சேனாதிபதி என்னும் செய்தி விடுபட்டுப் போனமையால் இப்பாட்டில் செய்தியைச் சொல்லி குறையை நிறைவு செய்தார் ஆடகம்- பொன்னினம் நால்வகையுள் ஒன்று. ஈடு-வலிமை. மயிந்தன், துமிந்தன் என்னும் வானர வீரர்களே அசுவினி தேவகுமாரர்கள் அம்சமாய்ப் பிறந்தவர்கள் என்பர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Beside the commander, close by the side of that hill which makes darkness,
  2. stand two like hills of gold;
  3. among the others, they match Irāmaṉ and Ilakkuvaṉ in strength;
  4. sons of the physicians of the gods, surpassing in might.'

What the poem says

Next to the dark-skinned commander Nīlaṉ stand two golden monkeys. They look like two golden hills beside a dark one. They are the sons of the Aśvins, the twin physicians of the gods, and tradition names them Mayintaṉ and Tumintaṉ.

In strength they are second only to Irāmaṉ and Ilakkuvaṉ. The verse also quietly fills a gap from the earlier introduction of Nīlaṉ by mentioning that he is the army's commander.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘cēṉāpatitaṉ ayalē, iruḷ ceyta kuṉṟiṉ
āṉā maruṅkē, iraṇṭu āṭakak kuṉṟiṉ niṉṟār,
ēṉōril irāmaṉ ilakkuvaṉ eṉṉum īṭṭār;
vāṉōrtam maruttuvar maintar, valikkaṇ mikkār.