கம்பராமாயணம் 6931 · யுத்த 10.30

Section யுத்த காண்டம் / 10. இராவணன் வானரத் தானை காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘உவன் காண் குமுதன்; குமுதாக்கனும் ஊங்கு அவன் காண்;
இவன் காண் கவையன்; கவயாக்கனும் ஈங்கு இவன் காண்;
சிவன் காண் அயன் காண் எனும் தூதனைப் பெற்ற செல்வன்
அவன் காண், நெடுங்கேசரி என்பவன், ஆற்றல் மிக்கான்.

பொருள் · Meaning in Tamil

உவன் காண் குமுதன் - அதோ அந்த நடுவிடத்திலேயிருப்பவன் குமுதன்; ஊங்கு அவன் காண் குமுதாக்கன் - அதோ அவனருகில் நிற்பவன்தான் குமுதாக்கன்; இவன் காண் கவயன்- இதோ இப்பக்கம் காண்கிறானே இவன்தான் கவயன்; கவயாக்கனும் ஈங்கு இவன்காண் - கவயாக்கன் எனப்படுபவனும் இதோ இங்கு காணப்படுகிறான்; காண்பாய்! சிவன் காண்; அயன் காண் - இவன் சிவனே; இவன் பிரமனே; எனும் தூதனைப் பெற்ற செல்வன் - என்று சொல்லப்படுகின்ற அனுமனாகிய தூதனைப் பெற்றுத்தந்த (பெருஞ்) செல்வனாகிய; அவன்காண் நெடுங்கேசரி - அவன்தான் அந்த நீண்ட புகழுக்குரிய கேசரி எனப்படுபவன்; ஆற்றல் மிக்கான் - பேராற்றல் படைத்தவன்.

குமுதாக்கன் (குமுத + அக்கன்) குமுதம் போன்ற கண்களையுடையவன். கவயாக்கன்-பசுவின் கண்கள் போன்ற கண்களையுடையவன். தம் இதயம் கவர்ந்த தொண்டனாகிய அநுமனைத் தந்த தந்தையாதலின், சிவன் காண்; அயன்காண் எனும் தூதனைப் பெற்ற செல்வன்; நெடுங்கேசரி என்றார். கேசரிக்கும் அஞ்சனைக்கும் பிறந்தவன் ஆஞ்சநேயனாகிய அநுமன் என்க. அநுமன் அமிசத்தால் சிவனும் அறிவால் பிரமனும் ஆதலின் "சிவன் காண்; அயன் காண்” எனப்பட்டான். ஒப்பு, "விரிஞ்சனோ விடை வலானோ? (3768) "காலனை ஒக்கும் தூதன் காலும் கண்ணுதலும் என்பார்" (6821); "புராரிமற்று யானே வாத சேயெனப் புகன்றான்" (206) "ஆதி அயன் தானேயென யாதும் அறைதின் நீர்!” (4725) என்று பல இடங்களில் இச்செய்தி குறித்தமை காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'See, that one is Kumutaṉ; and there beyond him, see, is Kumutākkaṉ;
  2. see, this is Kavayaṉ; and here, see, this one is Kavayākkaṉ;
  3. the fortunate one who fathered the envoy that men call Civaṉ and Ayaṉ —
  4. see him, that is great Kēcari, mighty in power.'

What the poem says

Cāraṉ names more monkey chiefs. Kumutākkaṉ means 'lily-eyed' and Kavayākkaṉ 'cow-eyed'.

Last comes Kēcari, father of Aṉumaṉ by his wife Añcaṉai. People call Aṉumaṉ Śiva (Civaṉ) because he shares in Śiva's nature, and Brahmā (Ayaṉ) because of his wisdom. Having fathered such an envoy, Kēcari is truly a fortunate man.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘uvaṉkāṇ kumutaṉ; kumutākkaṉum ūṅku avaṉkāṇ;
ivaṉkāṇ kavayaṉ; kavayākkaṉum īṅku ivaṉkāṇ;
civaṉkāṇ ayaṉkāṇ eṉum tūtaṉaip peṟṟa celvaṉ
avaṉkāṇ, neṭuṅ kēcari eṉpavaṉ, āṟṟal mikkāṉ.