கம்பராமாயணம் 6932 · யுத்த 10.31

Section யுத்த காண்டம் / 10. இராவணன் வானரத் தானை காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘முரபன், நகுதோளவன், மூரி மடங்கல் என்னக்
கரபல் நகம் அன்னவை மின் உகக் காந்துகின்றான்;
வர பல் நகம் தன்னையும் வேரொடு வேண்டின் வாங்கும்
சரபன் அவன்; இவன் சதவலி ஆய தக்கோன்.

பொருள் · Meaning in Tamil

நகுதோளவன் - ஒளிர்கின்ற தோளினையுடையவனாய், மூரி மடங்கல் என்ன - வலிய நரசிங்கம் என்று கூறும்படியாக; கரம், பல், நகம் அன்னவை - கைகளும், பற்களும், நகங்களும் ஆகியவை; மின் உகக் காந்துகின்றான் - மின்னல் போன்று ஒளி சிந்துமாறு விளங்குகின்ற அவன்தான்; முரபன் - முரபன் என்னும் பெயருடையவன்; வரபல் நகம் தன்னையும் - சிறந்த பல மலைகளையும், வேண்டின் வேரொடு வாங்கும் - விரும்பினால் வேரொடு பெயர்க்கவல்ல ஆற்றலையுடைய அவன் சரபன் - அவன்தான் சரபன் என்பவன்; இவன் - இதோ இங்கிருப்பவன்; சதவலி ஆய தக்கோன் - சதவலி எனும் பெயருடைய பெரியோன்.

மூரி-வலிமை-மடங்கல். திரிபு அணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Murapaṉ, of gleaming shoulders, like a mighty man-lion,
  2. blazes, his hands, teeth and claws flashing like lightning;
  3. he who, if he chose, would pull up even the great mountains by the roots —
  4. that is Carapaṉ; this is Catavali, the worthy one.'

What the poem says

Cāraṉ names three more chiefs. Murapaṉ blazes like the man-lion, his hands, teeth and claws flashing like lightning. Carapaṉ could pull mountains up by the roots if he wanted to. Catavali is a warrior of great standing.

The Tamil uses a sound-play, repeating similar syllables with different meanings, which the commentary calls tiripu.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘murapaṉ, naku tōḷavaṉ, mūri maṭaṅkal eṉṉak
kara pal nakam aṉṉavai miṉ ukak kāntukiṉṟāṉ;
vara pal nakamtaṉṉaiyum vēroṭu vēṇṭiṉ vāṅkum
carapaṉ avaṉ; catavali āya takkōṉ.