கம்பராமாயணம் 693 · பால 10.141
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வள்ளல் சேக்கை - வரையாது கொடுக்கும் தன்மை கொண்ட (ஆதிசேடனை) படுக்கையாகக் கொண்ட, கரியவன் - கரிய நிறமுள்ள திருமால், வைகுறும் - பள்ளி கொள்ளும்; வெள்ளம் - வெள்ளமாகிய; பாற்கடல்போல் - திருப்பாற்கடலைப்போல; மிளிர் - விளங்குகின்ற, கண்ணினாள் - கண்களையுடைய பெண்; எனது உள்ளத் தாமரையுள் - என் இதயமாகிய தாமரையில்; உறைகின்றதால் - வசிக்கின்ற காரணத்தால்; அள்ளல்பூமகள் - செந்தாமரை மலரில் (எப்போதும்) வாழ்கின்ற திருமகள்; ஆகும் கொலோ - ஆவாளோ?
பாற்கடலில் பாம்புப் படுக்கையில் பள்ளி கொண்டருளும் திருமால் - வெண்ணிறமுள்ள கண்ணின் கருநிறக் கண்மணியில் தோன்றும் பாவை. திருமாலின் திருமேனி நிறச் சிறப்பால் கறுத்துத் தோன்றும் சேடனாகிய பாம்பு - பாவையைத் தன்னுள்ளே கொண்டிருக்கும் கருவிழி. பாற்கடல் வெள்ளம் - கருமணியைச் சூழ்ந்துள்ள வெண்ணிறப் பரப்பு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'She whose eyes gleam like the flooding ocean of milk
- where the Dark One lies upon his generous couch —
- could she be the lady of the lotus that grows in the mire? For
- she dwells within the lotus of my heart.'
What the poem says
Irāmaṉ wonders whether Cītai is Lakṣmī herself, since she has made her home in the lotus of his heart, as Lakṣmī lives in the lotus. Her eyes are compared to the milk ocean on which Viṣṇu lies on the serpent couch: the white of the eye is the milky sea, the dark iris is the serpent darkened by Viṣṇu's colour, and the pupil is Viṣṇu himself. There is a hidden irony, since Irāmaṉ is Viṣṇu and Cītai is Lakṣmī.