கம்பராமாயணம் 694 · பால 10.142
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அருள் இலாள் எனினும் - (அவள் என்னிடம்) கருணை இல்லாதவள் ஆயினும்; மனத்து ஆசையால் - என் மனத்தின் (அவளிடம் உண்டான) காதலால்; வெருளும் நோய்விட - கலக்கத்தை உண்டாக்கும் காம நோய் நீங்குமாறு; கண்ணின் - தன் கண்களால்; விழுங்கலால் - (அவள் என்னை) உட்கொண்டதால்; தெருள் இலா உலகில் - தெளிவில்லாத இவ்வுலகிலே; சென்று நின்று - அசைவனவும் இயங்காதனவுமாகியும்; வாழ் பொருள் எலாம் - வாழ்கிற எல்லாப் பொருள்களும்; அவள் பொன் உரு ஆய - (எனக்கு) அந்த நங்கையின் பொன்மயமான வடிவமாகிவிட்டன.
அருளிலாள்: இராமன் உற்ற நோயினை அவனை உடனே தழுவித் தணித்து அருளாதவள். சென்று நின்று வாழ்பொருள் - சரஅசரங்களாகிய பொருள்கள். இதனால் 'நோக்குவ எல்லாம் அவையே போறல்' என்ற அவத்தை கூறப்பெற்றது. சீதையின் திருமேனி உருக்கிய பொன்னின் நிறத்தை உடையதாதலால் 'பொன்னுரு' எனப்பட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Though she has no pity, because of the longing in my mind,
- and because she swallowed me with her eyes so that this bewildering sickness should not leave me,
- in this unclear world, all things that live, moving or standing still,
- have become her golden form.'
What the poem says
Irāmaṉ complains that Cītai is pitiless, since she does not come to soothe the fever she has caused. Ever since she drank him in with her eyes, everything in the world, moving or unmoving, looks to him like her golden figure.
The commentary identifies this as one of the classical stages of love-sickness, in which the lover sees the beloved in everything he looks at. Her body is called golden for its colour of molten gold.