கம்பராமாயணம் 695 · பால 10.143
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பூண் உலாவிய - அணிகலன்கள் அசையப் பெற்ற; பொன்கலசங்கள் - பொன் கலசங்களைப் போன்ற (அப் பெண்ணின்) கொங்கைகள்; என் ஏண் இல் - பெருமையற்ற எனது; ஆகத்து - மார்பிலே; எழுதல என்னினும் - அழுந்திப் பதியாமல் போயினும்; வாள் நிலா முறுவல் - ஒளியுடைய சந்திரகாந்தி போன்ற புன்சிரிப்பையும்; கனிவாய் - கொவ்வைப் பழம் போன்ற அதரத்தையும் உடைய, மதி - (அவளது முகமாகிய) சந்திரனை, காணல் ஆவது - (மீண்டும்) பார்ப்பதற்கு; ஓர்காலம் - ஒரு காலமேனும்; உண்டாம் கொலோ - உண்டாகுமோ?
சீதையைத் தழுவும் கைகூடாவிட்டாலும் அவளது முகதரிசனமானது இன்னொருமுறை கூடினால் போதுமென இராமன் தன் காதல் மிகுதியை வெளியிடுகிறான். முறுவலைக் கண்ட இராமன் அதன் அருகிலுள்ள அதரத்தையும் கண்டு 'முறுவல் கனிவாய்மதி' எனக் கூறினான். கலசம், மதி - உவமையாகு பெயர்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Even if those golden pots where ornaments sway
- never press their mark upon my unworthy chest,
- will there ever be a time when I may see
- that moon with its bright moonlit smile and fruit-red lips?'
What the poem says
Irāmaṉ says that even if he is never to hold Cītai in his arms, he would be content just to see her face again — a moon with a smile bright as moonlight and lips red as ripe fruit. Her breasts are likened to golden pots adorned with jewels.