கம்பராமாயணம் 696 · பால 10.144
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எண்ணும் - (நான் எப்பொழுதும்) நினைத்துக் கொண்டிருக்கின்ற; கூற்றினுக்கு - (கன்னியாகிய) இயமனுக்கு; வண்ணம் மேகலை - அழகிய மேகலை என்னும் அணிகலன் அணிந்த; தேர் ஒன்று - தேர்த்தட்டுப் போன்ற அல்குல் ஒன்றும்; வாள் நெடுங்கண் இரண்டு - வாள்கள் போன்ற நீண்ட கண்கள் இரண்டும்; கதிர்முலை தாம் இரண்டு - பெருத்த தனங்கள் இரண்டும்; உள் நிவந்த நகை - வாயிடமாக அடங்கிப் பொலிந்த புன்சிரிப்பு; என்ற ஒன்றும் - என்ற ஒன்றும் உண்டு; இத்தனை வேண்டுமோ - (என்னைக் கொல்லக் கருதுகின்ற கூற்றுவனுக்கு இத்தனை கருவிகளும் வேண்டுமோ)
சீதையின் அல்குல், கண், முலை, நகை என்ற இவற்றுள் ஒவ்வொன்றும் என்னை வருத்துகின்றன. ஆனால், இவற்றுள் ஒன்றே என்னை வருத்தப் போதுமே! என்பது கருத்து. 'பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன் பெண்தகையால் பேரமர்க் கட்டு' - குறள் 1083. தேர் - உவமையாகு பெயர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'One chariot girt with a coloured girdle, two long
- sword-like eyes, two radiant breasts,
- and one thing more, the smile that rises from within —
- does the Death I keep thinking of need all these?'
What the poem says
Irāmaṉ pictures Cītai as Death come to kill him, armed with a whole arsenal: hips like a chariot, belted with a jewelled girdle; two long eyes like swords; two radiant breasts; and a smile glowing from within. Any one of these would be enough to destroy him, so why does she need so many weapons?
The commentary compares a couplet of the Tirukkuṟaḷ in which the lover says he never knew what Death was until he met a woman's battle-eyed beauty.