கம்பராமாயணம் 697 · பால 10.145
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கன்னல் வார்சிலை - கரும்பாகிய நீண்ட வில்லை; கால் வளைத்தே - வளைத்து; மதன் - மன்மதன்; பொன்னை முன்னிய - திருமகள் போன்ற சீதையை நினைக்கும் பொருட்டு; பூங் கணை மாரியால் எய்து - (என்மேல்) தொடுக்கும் மலரம்பு மழையால் எய்து; என்னை - (யார்க்கும் வலி தொலையாத) என்னை; தொலைக்கும் என்றால் - வலியழிப்பான் என்றால்; இனி - இனிமேல்; வன்மை என்னும் இது - வலிமை என்று சொல்லப்படுகின்ற குணம்; யாரிடை வைகும் - யாரிடத்திலே தங்கியிருக்கும்.
முன்னிய - செய்யிய என்னும் வினையெச்சம். இதுவரை வலிய வில்லம்புகளோடு கட்டமைந்த உடம்புமுடைய வீரர் யார்க்கும் வலி தொலையாத நான் இப்பொழுது மெல்லிய கரும்பு வில்லையும் மலர் அம்புகளையும் உடைய மன்மதனிடம் வலிமை இழக்கும்படி ஆயிற்றே என்று இராமன் வருந்தினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'If Matan, bending the ends of his long sugarcane bow,
- so that I should think of that golden one, shoots me with a rain of flower arrows
- and destroys me, then henceforth
- in whom will this thing called strength abide?'
What the poem says
Irāmaṉ, who has never lost his strength to any warrior armed with real bows and arrows, now finds himself overpowered by Kāma, the love god, whose bow is only a stalk of sugarcane and whose arrows are flowers. If he, of all people, can be undone like this, he wonders where strength can be said to reside at all.