கம்பராமாயணம் 698 · பால 10.146

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கொள்ளை கொள்ள - (உலக முழுவதையும்) கொள்ளை கொள்வதற்கு; கொதித்து எழு - பொங்கி எழுகின்ற; பாற்கடல் பள்ளம் - ஆழமான பாற்கடலினது; வெள்ளம் என - வெள்ளம் போல; படரும் நிலா - பரவியுள்ள நிலாவானது; உள்ள உள்ள - நான் (அந்த நங்கையை) நினைப்பதனால் தரித்துள்ள; உயிரை - என் உயிரை; துருவிட - அரிப்பதால்; வெள்ளை வண்ணம் - வெண்மை நிறமுள்ள; விடமும் - ஒரு நஞ்சும்; உண்டாம் கொல் - உலகில் உள்ளதோ?

கொள்ளை கொள்ளுதல்: ஒருங்கே கவர்ந்து தன்வசமாக்குதல். நஞ்சு கரிய நிறமுடையது என்று கூறுவது மரபு. ஆனால், நிலா என்னும் வெள்ளை நிறமுடைய விடம் காணப்படுகிறதே! என்று காதல் நோயால் வருந்தும் இராமன் தன்னை வருத்துகின்ற நிலாவைப் பழித்துக் கூறுகின்றான். கொள்ளை கொள்ளக் கொதித்தெழு நிலா: எனது உயிரை நானும் அறியாமல் கவர்ந்து செல்வதற்குச் சீறியெழும் நிலா என்றும் உரைக்கலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The moonlight spreading like the flood of the deep milk ocean
  2. boiling up to plunder everything
  3. bores into the life that lingers on only as I think and think of her —
  4. can there be a poison that is white in colour?'

What the poem says

The moonlight floods the world like the ocean of milk boiling over to seize everything, and it eats away at Irāmaṉ's life, which survives only because he keeps thinking of Cītai. Poison is traditionally black, he says, yet here is a white poison. The verse turns the usual pleasure of moonlight into torment for the separated lover.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1koḷḷai koḷḷak kotittu eḻu pāṟkaṭal
paḷḷa veḷḷam eṉap paṭarum nilā,
uḷḷa, uḷḷa uyirait turuviṭa,
veḷḷai vaṇṇa viṭamum uṇṭāmkolō.