கம்பராமாயணம் 699 · பால 10.147

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆகும் நல் வழி அல் வழி என் மனம்
ஆகுமோ, அதற்கு ஆகிய காரணம்,
பாகு போல் மொழிப் பசுமை தொடி, கன்னி ஏ
ஆகும், வேறு இதற்கு ஐயுறவு இல்லை ஏ.

பொருள் · Meaning in Tamil

ஆகும் - ஆக்கத்திற்குரிய; நல்வழி அல்வழி - நல்வழி அல்லாத தீய நெறி; என்மனம் ஆகுமோ - எனது நேர்மையான மனம் செல்லுமோ?; அதற்கு ஆகிய காரணம் - (அப்படியிருக்க என் மனம் இம் மங்கையிடம் காதல் கொண்டு சென்றதற்குப்) பொருந்திய காரணம்; பாகுபோல் மொழி - பாகுபோன்ற இனிய சொற்களையும்; பைந்தொடி - பசும்பொன் தொடியையும் உடைய இந்நங்கை; கன்னியே ஆகும் - (திருமணமாகாத) கன்னிகையே ஆவாள்; இதற்கு வேறு ஐயுறவு இல்லை - (இந்த முடிவுக்கு மாறாக) ஐயப்பட வேண்டியது ஒன்றுமில்லை.

தனது மனம் அம் மங்கையிடம் சென்றதால் அவள் திருமணமாகாத கன்னிப் பெண்ணாக இருக்கவேண்டுமென்று இராமன் கருதுகின்றான். சான்றோர்க்குத் தூய மனச்சான்றே அளவுகோல். நல்வழியல்லாத அல்வழி: பிறன் மனைவியை விழைதல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Would my mind ever go any way but the good way that leads to good?
  2. The reason for this, then, must be
  3. that she of the fresh bangles, whose speech is like syrup, is a maiden;
  4. there is no room for doubt about it.'

What the poem says

Irāmaṉ reassures himself. His mind would never stray onto a wrong path, such as desiring another man's wife. Since it has gone out to this woman with honey-sweet speech, she must be unmarried. For the virtuous, the commentary notes, a pure conscience is itself the measure of what is right.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ākum nalvaḻi alvaḻi eṉ maṉam
ākumō itaṟku ākiya kāraṇam,
pākupōl moḻip paintoṭi, kaṉṉiyē
ākum, vēṟu itaṟku aiyuṟavu illaiyē.