கம்பராமாயணம் 700 · பால 10.148

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கழிந்த - இறந்து போன; கங்குல் அரசன் - இரவாகிய அரசனது; கதிர்க்குடை - ஒளியுள்ள வெண்கொற்றக் குடையானது; விழுந்தது என்னவும் - (கீழே) விழுந்தது போலவும்; மேல்திசையாள் - மேற்குத் திசையான பெண்ணினுடைய; சுடர்க் கொழுந்து சேர் - இளமையான ஒளி பொருந்திய; நுதல் கோது அறு சுட்டி - நெற்றியில் அணிந்துள்ள குற்றமற்ற சுட்டி என்னும் அணியானது; போய் அழிந்தது என்னவும் - கெட்டு அழிந்தது போலவும்; திங்கள் - சந்திரன்; ஆழ்ந்தது - (மேற்கடலில்) மூழ்கியது.

வெண் கொற்றக்குடை வீழ்தல்: அரசன் ஒழிந்த நிலையையும், அவன் தேவியின் நெற்றிச்சுட்டி அழிந்தமை மேற்குத் திசை அரசியின் துக்கக் குறியையும் உணர்த்தும் என்பது குறிப்பு. தற்குறிப்பேற்றவணி. திலகம் இடாமை, நெற்றிச்சுட்டி அணியாமை முதலியன கணவரை இழந்த பெண்களுக்கு உரியன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As if the radiant parasol of the departed king of night
  2. had fallen, and as if the flawless ornament
  3. on the brow of the lady of the west, where the bright flame sits, had gone
  4. and perished — so the moon sank.

What the poem says

Night ends and the moon sets in the west. The poet sees two images in it. It is the white royal parasol of the king of night, falling as the king dies; and it is the jewelled forehead ornament of the lady of the western quarter, his queen, removed as a widow removes hers. The fancy marks the death of night and the mourning of the west.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaḻinta kaṅkul aracaṉ katirk kuṭai
viḻuntatu eṉṉavum, mēl ticaiyāḷ cuṭark
koḻuntu cēr nutal kōtu aṟu cuṭṭi pōy
aḻintatu eṉṉavum, āḻntatu tiṅkaḷē.