கம்பராமாயணம் 701 · பால 10.149

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வீசுகின்ற நிலாச் சுடர் வீந்தது ஆல்,
ஈசனாம் மதி ஏகவும், சோகம் அத்து ஆல்
பூசு வெண் கலவைப் புனை சாந்தினை,
ஆசை மாதர் அழித்தனர் என்னவே.

பொருள் · Meaning in Tamil

ஈசன் ஆம் மதி - உயிருக்கு உயிரான சந்திரன் என்னும் கணவன்; ஏகலும் - தம்மைப் பிரிந்து போன பின்பு, ஆசை மாதர் - திசைகளாகிய (அவனுடைய) ஆசை மனைவியர்; பூசுவெள் - (அக்கொழுநனால் பூசப்பட்ட) வெண்மையான; கலவைப் புனை சாந்தினை - கலவையாகிய சந்தனக் குழம்பை; சோகத்தால் - அவனைப் பிரிந்த துயரத்தால்; அழித்தனர் என்ன - அழித்துவிட்டவர்களைப் போல; வீசுகின்ற நிலாச்சுடர் - (சந்திரன் மறைந்த அளவில்) முன்பு (எல்லாத் திசையிலும்) பரவியிருந்த அவனது ஒளியாகிய நிலா; வீழ்ந்தது - (ஒளி) ஒழிந்தது.

ஆசை மாதர்: திசைகளாகிய மனைவியர்; காதலுடைய மாதர் எனவும் பொருள் தரும். தற்குறிப்பேற்ற வணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The streaming moonlight faded away,
  2. as if, when their lord the moon had gone, in their grief
  3. the women of the quarters had wiped off
  4. the white sandal paste they had smeared on themselves.

What the poem says

As the moon sets, its light vanishes from every direction. The quarters of the sky are pictured as the moon's wives who, mourning their departed husband, wipe off the white sandal paste he had put on them. The word for the quarters also means "desire", so they are also "loving women".

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vīcukiṉṟa nilāccuṭar vīḻntatāl,
īcaṉ ām mati ēkalum, cōkattāl
pūcu veṇ kalavaip puṉai cāntiṉai,
ācai mātar aḻittaṉar eṉṉavē.