கம்பராமாயணம் 6935 · யுத்த 10.34

Section யுத்த காண்டம் / 10. இராவணன் வானரத் தானை காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
‘
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘அண்ணல்! கேள்; இதற்கு அவதியும் அளவும் ஒன்று உளதோ?
விண்ணின் மீனினைக் குணிப்பினும், வேலையின் மீனை
எண்ணி நோக்கினும், இக்கடல் மணலினை எல்லாம்
கண்ணி நோக்கினும், கணக்கிலது ‘ என்றனன் காட்டி.

பொருள் · Meaning in Tamil

அண்ணல்! - பெருமைக்குரியோனே! கேள் - கேட்பாயாக (என்று), காட்டி - (அவ்வானரச் சேனையினைக்) காண்பித்து; இவர்க்கு - இந்த வானர வீரர்கட்கு; உவமையும் அளவும் - ஒப்பும் எண்ணிக்கையும்; ஒன்று உளதோ? - ஏதேனும் உண்டோ? விண்ணின் மீனினைக் குணிப்பினும் - வானத்து மீன்களை எண்ணினாலும்; வேலையுள் மீனை எண்ணி நோக்கினும் - கடலில் உள்ள மீன்களை எண்ணிப் பார்த்தாலும்; இக்கடல் மணலினை எல்லாம் கண்ணி நோக்கினும் - இந்தக் கடலில் உள்ள மணலை எல்லாம் கருதிப் பார்த்தாலும்; கணக்கு இலது - கணக்கிட இயலாது என்றனன்.

சேனையினை எண்ண இயலாது என்பதற்கு வானத்து மீன்களையும், கடல் மீன்களையும் ஆழி மணலையும் எண்ண இயலாதது போல் என மூன்று உவமைகள் காட்டினார்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Lord, listen: is there any bound or measure to this?
  2. Even if you count the stars in the sky, even if you number
  3. the fish within the ocean, even if you reckon
  4. all the sand of this sea, it is beyond count,' he said, pointing them out.

What the poem says

Cāraṉ ends his survey by pointing to the army as a whole. It cannot be counted. Counting the stars, the fish in the sea or the grains of sand on the shore would be easier.

He uses three comparisons for something beyond counting, one each from the sky, the sea and the shore.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘aṇṇal! kēḷ; itaṟku avatiyum aḷavum oṉṟu uḷatō?
viṇṇiṉ mīṉiṉaik kuṇippiṉum, vēlaiyuḷ mīṉai
eṇṇi nōkkiṉum, ik kaṭal maṇaliṉai ellām
kaṇṇi nōkkiṉum, kaṇakku ilatu ‘ eṉṟaṉaṉ kāṭṭi.