கம்பராமாயணம் 6938 · யுத்த 11.2
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கோபுரக் குன்றத்து ஏறி - மலை போன்ற கோபுரத்தின் மேல் ஏறி; உம்பர் திலோத்தமை முதலாக - தேவருலகத்துத் திலோத்தமை முதலாக; கூறு மங்கையர் குழாத்திடை - புகழப்படுகின்ற மகளிர் கூட்டத்திடையே; நின்றவன் - நிற்பவன்தான்; தன் குலக் கிளை நாறு எலாம் -தன்னுடைய குலத்தில் உதித்த சுற்றத்தார் என்னும் நாற்றுக்களையெல்லாம்; நரகத்து நடுவான் - நரகத்தில் நடுவதற்காக; சேறு செய்து வைத்தான் - நரகத்தை சேற்றுழவு செய்து வைத்திருப்பவனான; புன் தொழில் இராவணன் - இழிசெயல் புரிகின்ற இராவணன்; என்றான் - என்றான்.
கோபுரத்து ஏறி நிற்பவன் புன்தொழில் இராவணன் என்பதில் உள்ள எள்ளற் சுவையை நோக்குக. ஒரு வீரன் வீரர்குழாம் புடைசூழ நிற்றல் இயல்பு. இவன் மகளிர் குழாம் புடை சூழ நிற்கிறான் என அவன் ஒழுக்கத்தின் இழிவை உணர்த்தினார். இதனால், புன்தொழில் இராவணன் எனப்பட்டான். நாற்றங்காலிலிருந்து நாற்றைப் பிடுங்கி வயலில் நடுவது வழக்காதலின், இலங்கை நாற்றங்கால் ஆயிற்று; நரகம் வயல் ஆயிற்றென்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'To plant all the seedlings of his own clan and kin in hell,
- he has puddled the mud; with Tilōttamai of the heavens leading,
- amid the throng of celebrated women, he who has climbed the mountain of a tower
- and stands there is Irāvaṇaṉ of base deeds,' he said.
What the poem says
Vīṭaṇaṉ points out his brother. The image is from rice farming: a farmer prepares the muddy field and then plants out seedlings. Irāvaṇaṉ has prepared hell like a muddy field and will transplant his whole family into it.
There is irony in the scene too. A warrior king should stand surrounded by soldiers, but Irāvaṇaṉ stands among celestial dancers. That is why Vīṭaṇaṉ calls him 'of base deeds'.