கம்பராமாயணம் 6939 · யுத்த 11.3

Section யுத்த காண்டம் / 11. மகுட பங்கப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கருதி மற்று ஒன்று கழறுதல் முனம் - (வீடணன் மேலும்) மனத்தால் வேறு எண்ணி, ஒன்று கூறுவதற்கு முன்பே; சூரியன் புதல்வன் - சுக்கிரீவன்; விழிக்கனல்கள் பொருது முந்துறப் புக்கன - தனது கண்ணில் சினத்தால் எழுந்த தீப்பொறிகள் இராவணனைத் தாக்க முன்னால் புறப்பட்டவை போலப் புறப்பட; சுருதியன்னவன் - வேதமே போன்றவனும்; சிவந்த நல்கனி என்று சொல்ல - உனக்கு உணவு சிவந்த நல்லகனிகள் என்றுதாய் சொல்ல; பருதிமேல் பண்டு பாய்ந்தவன் ஆம் - சூரியனைக் கனியென்று முன்பு சூரியன் மேல் பாய்ந்தவனும் ஆகிய; எனப் பாய்ந்தான் - அநுமனைப் போல் (இராவணனை நோக்கிப் பாய்ந்தான்.

சுக்கிரீவன் உடலினும் மனம் முந்த மனத்திலும் மனத்துள் எழுந்த சினம் முந்த, சினத்திலும் அதனால் எழுந்த தீப்பொறிகள் முந்தி இராவணனைத் தாக்கச் சென்றன என்று கூறியுள்ள கற்பனைத் திறன் சுவைக்கத் தக்கது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Before he could think of something more and say it, the fire of his eyes
  2. rushed ahead to do battle; the son of the Sun,
  3. like the one, the Veda's equal, who, when told 'red fruits are good,'
  4. leapt long ago upon the sun — so he leapt.

What the poem says

Before Vīṭaṇaṉ can say anything more, Cukkirīvaṉ, son of the Sun, leaps from the hilltop at Irāvaṇaṉ. The sparks of rage from his eyes fly ahead of him.

He is compared to Aṉumaṉ, who as a baby was told by his mother that ripe red fruits were his food and leapt at the rising sun. The commentary admires the sequence: his mind races ahead of his body, his anger ahead of his mind, and the sparks ahead of his anger.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1karuti maṟṟoṉṟu kaḻaṟutalmuṉam viḻik kaṉalkaḷ
porutu pukkaṉa muntuṟa, cūriyaṉ putalvaṉ
curuti aṉṉavaṉ, ‘civanta nal kaṉi ‘eṉṟu colla,
parutimēl paṇṭu pāyntavaṉ ām eṉa, pāyntāṉ.