கம்பராமாயணம் 6940 · யுத்த 11.4

Section யுத்த காண்டம் / 11. மகுட பங்கப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சுதையத்து ஓங்கிய - வானத்து மீன் மண்டலம் வரை உயர்ந்தோங்கியுள்ள; சுவேலத்தின் உச்சியைத் துறந்து - சுவேல மலையின் உச்சியை விட்டு; திண்திறல் சிதைய - பேர் ஆற்றல் எல்லாம் சிதையுமாறு; இராவணக் குன்றிடைச் சென்றான் - இராவணன் என்னும் மலைமேல் பாய்ந்த சுக்கிரீவன்; செங்கரம் ததையப்பரப்பிய - தன் செந்நிறக்கிரணங்களை, அடர்த்தியாகப் பரவச் செய்த; தன் பெருந்தாதை - தன்னுடைய பெருமைக்கு உரிய தந்தையாகிய சூரியன்; உதயக் குன்றின் நின்று - தான் உதிக்கும் உதயகிரி எனும் மலையிலிருந்து; உகுகுன்றில் பாய்ந்தவன் ஒத்தான் -தான் மறையும் அத்தமனகிரிக்குப் பாய்ந்தானைப் போன்றவன் ஆனான்.

ஒரு மலை மேலிருந்து இன்னொரு மலைமேல் குதித்தான் என்பது ஒரு நயம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Leaving the summit of Cuvēlam that soars up to the stars,
  2. he went to the mountain that was Irāvaṇaṉ, to shatter his firm might,
  3. like his own great father, spreading his red rays thick,
  4. leaping from the mountain of rising onto the mountain of setting.

What the poem says

Cukkirīvaṉ springs from the peak of Cuvēlam onto Irāvaṇaṉ, who is himself like a mountain.

The leap is compared to the course of his father, the Sun, who blazes across the sky from the eastern mountain where he rises to the western mountain where he sets. It is a jump from one mountain to another, in both the literal and the figurative sense.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cutaiyattu ōṅkiya cuvēlattiṉ ucciyait tuṟantu,
citaiyat tiṇ tiṟal irāvaṇak kuṉṟiṭaic ceṉṟāṉ,
tataiyac ceṅ karam parappiya taṉ perun tātai
utayak kuṉṟiṉniṉṟu uku kuṉṟil pāyntavaṉ ottāṉ.