கம்பராமாயணம் 6941 · யுத்த 11.5

Section யுத்த காண்டம் / 11. மகுட பங்கப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பள்ளம் போய்ப் புகும் புனல் என - பள்ளமான இடத்திற்குப் பாய்ந்தோடும் நீரே போல; படியிடைப் படிந்து தள்ளும் பொற்கிரி - பூமியிலே சாயுமாறு சாய்த்துத் தள்ளப்பட்ட திரிகூட மலையும்; சலிப்புறக் கோபுரம் சார்ந்தான் - சலிப்படையுமாறு இராவணனிருந்த கோபுரத்தைச் சார்ந்தவனான சுக்கிரீவன்; வெள்ளம் போற் கண்ணி அழுதலும் - வெள்ளம் போலக் கண்ணீர் பெருக்கும் கண்களையுடைய சீதை (விம்மி) அழுதவுடன்; உள்ளம் போல் - தன் மனம் சென்ற வேகத்திலேயே; இராவணன் மேல் செலும் - இராவணன் மேல் பாய்ந்து சென்ற; கழுகினுக்கு அரசனும் ஒத்தான் - கழுகின் வேந்தனாகிய சடாயுவையும் ஒத்தவன் ஆனான்.

சுக்கிரீவன் இராவணன் மேல் பாய்ந்த வேகத்திற்குப் பள்ளம் பாயும் வெள்ளத்தை உவமையாக்கினார் மேருவுக்கும் வாயுவுக்கும் நிகழ்ந்த பலப் போட்டியில் வந்து வீழ்ந்த மேருவின் ஒரு துண்டாதலின் திரிகூடமலை "தள்ளும் பொற்கிரி” எனப்பட்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like water rushing down into a hollow, he plunged,
  2. and reached the tower so that even the golden hill, once thrust down to earth, was shaken;
  3. he was like the king of the vultures too, who, when she whose eyes poured floods of tears wept,
  4. went for Irāvaṇaṉ as swiftly as his own heart.

What the poem says

Cukkirīvaṉ lands on the tower like water rushing into a pit, and he shakes Mount Tirikūṭa on which Ilaṅkai stands. Tradition says that hill is a fragment of Mount Mēru, broken off in a contest of strength between Mēru and the Wind-god.

He is also compared to Caṭāyu, king of the vultures. When Cītai was being carried off and weeping, Caṭāyu flew at Irāvaṇaṉ as fast as thought. This attack echoes that earlier one.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paḷḷam pōyp pukum puṉal eṉap paṭiyiṭaip paṭintu
taḷḷum poṟ kiri calippuṟak kōpuram cārntāṉ,
veḷḷampōl kaṇṇi aḻutalum, irāvaṇaṉmēl taṉ
uḷḷampōl celum kaḻukiṉukku aracaṉum ottāṉ.