கம்பராமாயணம் 6942 · யுத்த 11.6
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கரிய கொண்டலை - கருமை நிறம் கொண்ட முகில் போன்றவனும்; அம் கருணை கடலினை - அழகிய கருணையின் கடல் போன்றவனுமான இராமபிரானை; காண - (கண்ணாரக்) கண்டு மகிழ்வதற்காக; பெரிய கண்கள் பெற்று - பெரிய அளவினையுடைய கண்களைப் (பேறாகப்) பெற்று; உவக்கின்ற அரம்பையர் பிறரும் - மகிழ்வில் இளைக்கின்ற வானமாதர்களும் பிற மாதர்களும்; உரியகுன்றிடை - தமக்குரிய மலையின் மீது; உரும் இடி வீழ்தலும் - அச்சம் தரத்தக்க இடி வீழ்ந்தவுடன்; உலைவுற்று - மனம் நடுங்கி; இரியல் போயின - (திசைக்கொன்றாக) அஞ்சி ஓடுகின்ற; மயில் குலம் ஆம் என - மயிற்கூட்டங்கள் என்னுமாறு; இரிந்தார் - அஞ்சி ஓடினர்
இராமனின் பேரழகை மொண்டுண்ணப் பெருங்கண்கள் வேண்டும் என்று அப்பெண்கள் வரங்கேட்டுப் பெற்று வந்தவை என்பாராய். "பெரிய கண்கள் பெற்று” என்றார் இராம மேகம் கருணைக் கடலிலிருந்து இந்த அழகு வெள்ளத்தைப் பெற்று வந்துள்ளது என்பாராய், "கரிய கொண்டலை, கருணை அம் கடலை” எனச் சேர்த்துள்ள திறம் காண்க. உயிர்களைக் கவர்ந்து ஈர்க்கும் அழகு, உள்ளத்தில் கருணை எழுந்த போது எழும் எனும் ஓர் அரிய செய்தியும் இங்குப் புலனாகிறது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Gazing on the dark rain-cloud, the lovely ocean of compassion,
- the Arampaiyar and the others, rejoicing in the great eyes they had been granted,
- when a thunderbolt fell on their own hill, trembling,
- fled like a great flock of peacocks scattering in fear.
What the poem says
The celestial women on the tower had been feasting their eyes on Irāmaṉ. The poet suggests they had asked for large eyes as a boon so that they could drink in his beauty. When Cukkirīvaṉ crashes onto the tower like a thunderbolt, they scatter like peacocks when lightning strikes their hill.
Irāmaṉ is called both a dark rain-cloud and an ocean of compassion. The commentary reads this as saying his captivating beauty flows from the compassion in his heart, as a cloud draws its water from the sea.