கம்பராமாயணம் 6943 · யுத்த 11.7
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கால இருள் சிந்து கதிரோன் மதலை - கரிய இருளை ஒழிக்கின்ற சூரியன் புதல்வனான சுக்கிரீவன்; அடல் இராவணனைக் கண்ணுற்று - ஆற்றல் மிக்க இராவணனைக் கண்டு; ஏல எதிர் சென்று எய்தி - நெருங்கி எதிரே சென்றடைந்து; அன்று ஆலவிடம் வர- (பாற்கடல் கடைந்த) அன்று, கடலில் ஆலகால விடம் தோன்ற, நின்ற சிவன் அன்னான் - (அஞ்சாது) எதிர் நின்ற சிவபெருமானைப் போன்றவனாய்; நீல மலைமுன் கயிலை - நீலகிரியின் முன்னால் கயிலாயகிரி; நின்றது என நின்றான் - நிற்பது போல நின்றான்.
கரிய நிறம் கொண்ட இராவணனுக்கு நீல மலையும், வெள்ளை நிறங்கொண்ட சுக்கிரீவனுக்குக் கயிலைமலையும் உவமை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The son of the sun that scatters the black darkness, seeing him,
- went straight up to face the mighty Irāvaṇaṉ
- and stood like Kailāsa standing before a blue mountain;
- he was like Civaṉ, who stood firm when the deadly poison rose that day.
What the poem says
Cukkirīvaṉ, son of the Sun, faces Irāvaṇaṉ. The pale monkey king before the dark demon looks like the white mountain Kailāsa standing in front of a blue-black mountain.
He is also like Śiva, who stood his ground without fear when the deadly poison rose out of the churned ocean.