கம்பராமாயணம் 6946 · யுத்த 11.10

Section யுத்த காண்டம் / 11. மகுட பங்கப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அடித்த விரல் பட்ட உடலத்துழி இரத்தம்
பொடித்து எழ உறுக்கி எதிர் புக்கு உடல் பொருந்தி
கடித்த விசையின் கடிது எழுந்து கதிர் வேலான்
முடித் தலைகள் பத்தினும் முகத்தினும் உதைத்தான்.

பொருள் · Meaning in Tamil

அடித்த விரல் பட்ட உடலத்து உழி - இராவணன் அடித்த விரல் பட்ட (சுக்கிரீவன்) உடம்பிலிருந்து; இரத்தம் பொடித்து எழ - இரத்தம் துளிதுளியாய்ப் பொங்க, உறுக்கி எதிர்புக்கு - சினம் பொங்கி, இராவணன் முன்னே சென்று; உடல் பொருந்து - (அவனுடன் தன் உடலைப் பூட்டி; கடுத்த விசையில் - மிக்க வேகத்துடன்; கடிது எழும்பி - விரைந்து மேல் எழுந்து; கதிர் வேலான் - ஒளி மிகு வேல் ஏந்திய இராவணனுடைய, முடித்தலைகள் பத்தினும் - மகுடம் அணிந்த தலைகள் பத்தின் மேலும்; முகத்தினும் - முகத்தின் மேலும்; உதைத்தான் - (சுக்கிரீவன்) உதைத்தான்.

முகத்திலும் தலையிலும் உதை விழல்-செய்தவன் உயர்வையும், செய்யப்பட்டவன் இழிவையும் உணர்த்தும் இப்பாடலில் மற்போர் முறை சுட்டப்பட்டுள்ளது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Where the fingers that struck him had landed on his body, blood
  2. spurted out; roaring, he rushed in and locked body to body,
  3. and with fierce speed sprang swiftly up, and on the bright-speared one's
  4. ten crowned heads and on his faces he kicked.

What the poem says

Blood spurts where Irāvaṇaṉ's blows landed, but Cukkirīvaṉ, roaring, closes in and grapples with him. Then he jumps up and kicks Irāvaṇaṉ on all ten crowned heads and in the face.

Being kicked in the face and head is the worst humiliation, and the verse shows the moves of traditional wrestling.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṭitta viral paṭṭa uṭalattuḻi irattam
poṭittu eḻa uṟukki etir pukku uṭal porunti
kaṭutta vicaiyiṉ kaṭitu eḻuntu katir vēlāṉ
muṭit talaikaḷ pattiṉum mukattiṉum utaittāṉ.