கம்பராமாயணம் 6948 · யுத்த 11.12
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
துகைத்தவன் உடற்பொறை - (தன்னை நிலத்தில்) தேய்த்தவனான இராவணனின் உடலை; சுறுக்கொள இறுக்கி - புகை நாற்றம் எழுமாறு இறுக்கிப் பிடித்து; தகைப் பெரு வலத்தொடு - தகுதி நிறைந்த வலிமையோடு; தலத்திடை அமுக்கி - பூமியில் அழுத்தி; வகைப் பிறை நிறத்து - பல்வகையான வடிவங்களைக் கொண்ட பிறைகளைப் போன்ற தன்மையுடைய; எயிறுடைப் பொறி வழக்கின் - (இராவணனுடைய) பற்களைக் கொண்ட உறுப்பாகிய வாயின் வழியே; குகைப் பொழி புதுக்குருதி - குகையிலிருந்து பொங்குகின்ற வெள்ளம் போலப் (பொங்குகின்ற) புதிய இரத்தத்தை; கைக்கொடு குடித்தான் - (சுக்கிரீவன் தன்) கைகளால் அள்ளிக் குடித்தான்.
சுறுக்கொளல்- புகை நாற்றம் வீசுதல். "மங்கையர் நறுங் கூந்தலின் சுறு நாறுகின்றது” (கம்ப. 6083) பிறை நிலாப் பல்வேறு வடிவங்களில் தோன்றுவது போல், இராவணனின் பற்களும் பல்வேறு வடிவங்களில் தோன்றுவதால் "வகைப்பிறை நிறத்து எயிறு" என்றார் வழக்கின் - வழியின், பொருட்சிறப்பால் "வழக்கி” எனும் பாடம் தவிர்த்து "வழக்கின்" எனும் பாடம் கொள்ளப்பட்டது; இராவணன் பெரிய வாய், குகைக்கும் அதில் கொட்டும் இரத்தம் குகையிலிருந்து கொட்டும் வெள்ளத்திற்கும் உவமை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Squeezing the bulk of the trampler's body till it reeked of burning,
- pressing him to the ground with great and fitting strength,
- from the mouth with its teeth like crescent moons of many shapes,
- the fresh blood pouring as from a cave he scooped up in his hands and drank.
What the poem says
Cukkirīvaṉ recovers and turns the tables. He squeezes Irāvaṇaṉ so hard that his body gives off a smell like smoke, and pins him to the ground. Blood gushes from Irāvaṇaṉ's mouths, and Cukkirīvaṉ scoops it up in his hands and drinks it.
Irāvaṇaṉ's fangs are curved like crescent moons of different shapes, and his huge mouth is like a cave with blood streaming out of it. The commentary prefers one manuscript reading over another for the word meaning 'by way of'.