கம்பராமாயணம் 6952 · யுத்த 11.16

Section யுத்த காண்டம் / 11. மகுட பங்கப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1விழுந்தனர், சுழன்றனர்; வெகுண்டனர், திரிந்தார்;
அழுந்தினர், அழுந்திலர்; அகன்றிலர். அகன்றார்;
எழுந்தனர், எழுத்திலா; எதிர்ந்தனர், முதிர்ந்தார்;
ஒழிந்தனர், ஒழிந்திலர்; உணர்ந்திலர்கள், ஒன்றும்.

பொருள் · Meaning in Tamil

விழுந்தனர் - அகழியில் வீழ்ந்த இருவரும்; வெகுண்டனர்; சுழன்றனர்; திரிந்தார் - சினந்து சுற்றி வலம் இடமாகத் திரிந்து, அழுந்தினர் அழுந்திலர் - ஒருவர் உடலில் ஒருவர் அழுந்தியும் அழுந்தாமலும் வெளிப்பட்டும்; அகன்றிலர் அகன்றார் எழுந்தனர் - ஒருவரை ஒருவர் விடாமல் நெருங்கியும், நெருங்காமல் மேலே உயரக்கிளம்பியும்; எழுந்திலர் எதிர்ந்தனர் - எழுந்திராமலே (கிடந்தவண்ணமே) எதிர்த்தும்; ஒழிந்தனர் ஒழிந்திலர் - சிறு பொழுது போர் நிற்பது போன்று தோன்றினும் நிற்காது; ஒன்றும் உணர்ந்திலர்கள் - புறத்து நிகழ்வது ஒன்றும் அறியாமல் (தம்மை) மறந்து; முதிர்ந்தார் - போரிடுவதில் மும்முரமாக ஈடுபட்டனர்.

அகழியுள் வீழ்ந்து நீரிடைப் படர்ந்த பாசி போன்று ஒருவரை ஒருவர் விடாமல் போரிடுவதை, உழிஞைத் திணையில், "நீர்ச்செருவீழ்ந்த பாசி" என்பர். இத்துறையினை விளக்குமிடத்துப் "பாசிபோல் நீங்காமல் நிற்றலின் 'பாசி' என்றார் என விளக்குகிறார் நச்சினார்க்கினியர். (தொல். பொருள். புறத் 13)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They fell, they whirled; they raged, they circled;
  2. they sank in, they did not; they parted not, they parted;
  3. they rose, they did not rise; they clashed, they pressed on;
  4. they stopped, they did not stop; they knew nothing else at all.

What the poem says

The poet conveys the wild struggle in the moat by pairing opposites. The two grapple, roll and twist. They come apart and close again, rise and go down. Sometimes the fight seems to pause, but it never stops, and neither notices anything outside it.

The commentary relates this to a convention of Tamil war poetry, combat in water during a siege. There the fighters are said to cling to each other like moss in a pond.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1viḻuntaṉar, cuḻaṉṟaṉar; vekuṇṭaṉar, tirintār;
aḻuntiṉar, aḻuntilar; akaṉṟilar. akaṉṟār;
eḻuntaṉar, eḻuntilar; etirntaṉar, mutirntār;
oḻintaṉar, oḻintilar; uṇarntilarkaḷ, oṉṟum.