கம்பராமாயணம் 6953 · யுத்த 11.17

Section யுத்த காண்டம் / 11. மகுட பங்கப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அந்தர அருக்கன் மகன் ஆழி அகழ் ஆக
சுந்தரம் உடைக் கரம் வலிப்ப ஒர் சுழி பட்டு
எந்திரம் எனத் திரி இரக்கம் இல் அரக்கன்
மந்தரம் என கடையும் வாலியையும் ஒத்தான்.

பொருள் · Meaning in Tamil

அந்தர அருக்கன் மகன் - வானத்தே சஞ்சரிக்கின்ற சூரியன் புதல்வனாகிய சுக்கிரீவன்; அகழ் ஆழி ஆக - அகழியே பாற்கடல் போல் ஆக; சுந்தர உடைக்கரம் வலிப்ப- அழகினையுடைய கரங்களால் இழுத்துக்கடைய; சுழிபட்டு - ஒருசுழியில் சிக்கி; எந்திரம் எனத் திரி - (அதனிடையில்) இயந்திரம் போன்று சுழல்கின்ற; இரக்கம் இல் அரக்கன் -இரக்கமில்லாத அரக்கனாகிய இராவணன்; மந்தரம் என - மந்தர கிரி போலாக; கடையும் வாலியையும் ஒத்தான் - கடல் கடைந்த வாலி போல் தோன்றினான்.

உருவகத்தை உறுப்பாகக் கொண்ட உவமையணி. அகழி- பாற்கடல் ஆகவும், இராவணன் மந்தர மலையாகவும், சுக்கிரீவன் கடல் கடைந்த வாலியாகவும் கொள்க. இப்பாடலில் இராவணன் சுக்கிரீவனைக் கடைவதாகக் கொள்ளலாமாறும் சொல்லமைப்புள்ளதைக் கண்ட பழைய உரையாளர். "இந்தக் கவிக்குச் சுக்கிரீவன் கர்த்தாவாக அறிக” எனக் குறித்துள்ளமை குறிக்கத்தக்கது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The son of the sun that moves through the sky, with the moat as the ocean,
  2. pulling with his handsome hands — caught in a whirlpool,
  3. the pitiless demon, spinning like a machine, being Mantara —
  4. was like Vālī churning.

What the poem says

The fight in the moat looks like the churning of the ocean. The moat is the Ocean of Milk. Irāvaṇaṉ, spinning in a whirlpool like a machine, is Mount Mantara, the churning rod. Cukkirīvaṉ, hauling on him with both hands, is like his brother Vālī, who once churned the sea for the gods.

An old commentator noted that the wording could also be read with Irāvaṇaṉ churning Cukkirīvaṉ, and specified that Cukkirīvaṉ is the subject.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1antara arukkaṉ makaṉ āḻi akaḻ āka
cuntaramuṭaik karam valippatu or cuḻippaṭṭu
entiram eṉat tiri irakkam il arakkaṉ
mantaram eṉa kaṭaiyum vāliyaiyum ottāṉ.