கம்பராமாயணம் 6954 · யுத்த 11.18

Section யுத்த காண்டம் / 11. மகுட பங்கப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஊறுபடு செம்புனல் உடைந்து அகழை உற்ற
ஆறு படர்கின்றன எனப் படர அன்னார்
பாறு பொருகின்றன பரந்தவை எனப் போய்
ஏறினர் விசும்பிடை; இரிந்த உலகு எல்லாம்.

பொருள் · Meaning in Tamil

ஊறு படு - புண்பட்ட உடலிலிருந்து; செம்புனல் - கொட்டுகின்ற இரத்தம்; உடைத்த கரை உற்ற - உடைபட்ட கரையாகக் கூடிய; ஆறு படர்கின்றன என -நதிகள் இரண்டு பெருக்கெடுக்கின்றன என்னுமாறு; படர்- அகழியில் சங்கமிக்க; அன்னார் - சுக்கிரீவன், இராவணன் எனும் இருவரும்; பாறு பருந்து இவை பொருகின்றன - கழுகும் கருடனுமாகிய இரண்டும் போரிடுகின்றன; எனப் போய் - எனுமாறு எழுந்து; விசும்பிடை ஏறினர் - ஆகாய வீதியில் உயர்ந்தனர்; உலகெல்லாம் - இந்தக் காட்சியைக் கண்ட உலகினர்; இரிந்த- அஞ்சி ஓடினர்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the red streams from their wounds spread like rivers
  2. bursting their banks, those two,
  3. like a vulture and a kite locked in fight, went up
  4. and rose into the sky; the whole world fled.

What the poem says

Both fighters are bleeding so heavily that their blood flows into the moat like two rivers breaking their banks. Then they rise out of the moat and continue fighting in the sky like two great birds of prey, and everyone watching flees in fear.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ūṟu paṭu cempuṉal uṭaitta karai uṟṟa
āṟu paṭarkiṉṟaṉa eṉap paṭara aṉṉār
pāṟu porukiṉṟaṉa paruntu ivai eṉap pōy
ēṟiṉar vicumpiṭai; irinta ulaku ellām.