கம்பராமாயணம் 6956 · யுத்த 11.20
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
விசும்பிடை - ஆகாயத்தில்; பொங்கு அமர் உடன்று பொருபோழ்தில் - சினம் பொங்கிக் கொதித்து (இருவரும்) போரிடுங்காலத்தில்; செங்கதிரவன் சிறுவனை - சிவந்த கிரணங்களையுடைய சூரியன் புதல்வனாகிய சுக்கிரீவனை; திரள் புயத்தால் - தன் திரண்ட இருபது தோள்களால்; மங்கல வயங்குஒளி - அச்சுக்கிரீவனுடைய தூயமேனியில் விளங்கும் ஒளியை; மறைத்தவல் அரக்கன் - மறைத்து நின்ற வலிய இராவணன்; வெங்கதிர் கரந்தது- வெப்பம் நிறைந்த கதிர்களையுடைய சூரியனை மறைத்து நின்ற; ஒரு மேகம் எனல் ஆனான் - ஒரு மேகம் போல் தோன்றினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As they fought, raging, in the sky in surging battle,
- the son of the red-rayed sun, with his massed arms
- hiding his auspicious, shining light, the mighty demon
- looked like a cloud that has covered the burning sun.
What the poem says
The struggle continues in the sky. Irāvaṇaṉ wraps all twenty arms around Cukkirīvaṉ and hides his shining body. The dark demon over the bright son of the Sun looks like a storm cloud covering the sun.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1poṅku amar vicumpiṭai uṭaṉṟu poru pōḻtil
ceṅ katiravaṉ ciṟuvaṉai, tiraḷ puyattāl
maṅkala vayaṅku oḷi maṟaitta val arakkaṉ
veṅ katir karantatu oru mēkam eṉal āṉāṉ.