கம்பராமாயணம் 6958 · யுத்த 11.22

Section யுத்த காண்டம் / 11. மகுட பங்கப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஒன்று உற விழுந்த உருமைத் தொடர ஓடா
மின்தெரி எயிற்றின் ஒரு மேகம் விழும் என்ன
‘தின்றிடுவன் ‘என்று எழு சினத் திறல் அரக்கன்
பின் தொடர வந்து இரு கரத் துணை பிடித்தான்.

பொருள் · Meaning in Tamil

ஒன்றுற விழுந்த - சிதறாது வீழ்ந்த; உருமைத் தொடர ஓடா - இடியைப் பின் தொடர்ந்து ஓடி; மின் தெரி எயிற்றின் - மின்னல் மின்னுவது போன்று தெரிகின்ற பற்களையுடைய, ஒரு மேகம் விழும் என்ன- ஒரு மேகம் விழுகின்றது என்னுமாறு; 'தின்றிடுவென்' என்று - இவனைத் தின்றிடுவேன் என்று கூறி; எழுசினத்திறல் அரக்கன் - ஓங்குகின்ற வெகுளியையுடைய வல்லரக்கன் ஆகிய இராவணன்; பின் தொடரவந்து - சுக்கிரீவனைப் பின்பற்றி வந்து; இருகரம் துணை பிடித்தான் - அவன் இருகரங்களையும் தன் இருகரங்களாலும் பற்றினான்.

மின்னலைத் தொடர்ந்து இடி விழும்; இங்கு மாறி வருதலின் இல்பொருள் உவமை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As though, chasing the thunderbolt that had fallen whole, a cloud
  2. with teeth that flashed like lightning came plunging down,
  3. crying 'I will devour him,' the demon of rising fury and might
  4. came after him and seized both his hands.

What the poem says

Irāvaṇaṉ leaps down after Cukkirīvaṉ, shouting that he will eat him, and grabs him by both hands. Cukkirīvaṉ dropping like a thunderbolt and the dark Irāvaṇaṉ following, his fangs flashing like lightning, look like a cloud chasing its own thunderbolt.

The commentary notes the reversal of nature: normally lightning comes first and thunder follows, but here the thunderbolt falls first and the lightning-toothed cloud follows.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1oṉṟuṟa viḻunta urumait toṭara ōṭā
miṉ teri eyiṟṟiṉ oru mēkam viḻum eṉṉa
‘tiṉṟiṭuveṉ ‘eṉṟu eḻu ciṉat tiṟal arakkaṉ
piṉ toṭara vantu iru karat tuṇai piṭittāṉ.