கம்பராமாயணம் 6959 · யுத்த 11.23

Section யுத்த காண்டம் / 11. மகுட பங்கப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வந்தவனை நின்றவன் வலிந்து எதிர் மலைந்தான்
அந்தகனும் அஞ்சிட நிலத்திடை அரைத்தான்;
எந்திரம் எனக் கடிது எடுத்து அவன் எறிந்தான்;
கந்துகம் எனக் கடிது எழுந்து எதிர் கலந்தான்.

பொருள் · Meaning in Tamil

நின்றவன்- நின்றவனான சுக்கிரீவன்; வந்தவனை - வந்தவனான இராவணனை; வலிந்து எதிர் மலைந்தான் - வலிமையுடனே எதிர்த்துப் போரிட்டான்; அந்தகனும் அஞ்சிட - யமனும் அஞ்சுமாறு; நிலத்திடை அரைத்தான் - பூமியில் இட்டுத் தேய்த்தான்; அவன் எந்திரம் என - அப்போது, இராவணன் இயந்திரம் எனுமாறு; கடிது எடுத்து எறிந்தான் - சுக்கிரீவனை விரைந்து எடுத்து வீசி எறிந்தான்; கந்துகம் எனக் கடிது எழுந்து - (வீசியெறியப்பட்ட) பந்து விரைவில் திரும்புவது போல விரைவில் எழுந்து வந்து; எதிர் கலந்தான் - மீண்டும் சுக்கிரீவன் (அரக்கனோடு) கை கலந்தான்;

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The one who stood his ground fought back hard against the one who came;
  2. so that even Death would be afraid, he ground him against the earth;
  3. like a machine, the other swiftly lifted him and flung him off;
  4. like a ball he sprang swiftly back and closed with him again.

What the poem says

The two keep trading advantages. Cukkirīvaṉ grinds Irāvaṇaṉ into the ground so fiercely that even Yama, the god of death, would be frightened. Irāvaṇaṉ lifts him like a machine and hurls him away. Cukkirīvaṉ bounces back like a thrown ball and rejoins the fight.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vantavaṉai niṉṟavaṉ valintu etir malaittāṉ
antakaṉum añciṭa nilattiṭai araittāṉ;
entiram eṉak kaṭitu eṭuttu avaṉ eṟintāṉ;
kantukam eṉak kaṭitu eḻuntu etir kalantāṉ.