கம்பராமாயணம் 6960 · யுத்த 11.24
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
படிந்தனர்; பரந்தனர்- (இருவரும்) நிலத்தில் படிந்து வீழ்ந்து, பல திசைகளிலும் பரவிச் சென்று போரிட்டனர்; பரந்தது ஓர் நெருப்பின் - எவ்விடத்தும் பரவி எரியும் நெருப்பினைப் போல; கொடுஞ்சினம் முதிர்ந்தனர் - கொடுங் கோபம் முற்றினார்கள்; உரத்தின் மிசை குத்த - (ஒருவறி மார்பின் மேல் (ஒருவற் குத்த; நெடுஞ்சுவர் பிளந்தன - அருகிலிருந்த சுவர்கள் (அதிர்ச்சியில்) பிளந்தன; நிமிர்குன்றம் நெரிந்த - ஓங்கி உயர்ந்திருந்த மலைகள் பொடிந்து சரிந்தன; இலங்கைமதில் எங்கும் இடிந்தன; தகர்ந்தன - இலங்கையில் மதில்கள் என்று இருப்பவையெல்லாம் இடிந்து தகர்ந்தன.
அதிர்ச்சியால் கட்டிடங்கள் சிதையும் என்பதை அன்றே அறிந்து உணர்த்தும் நுட்பத்தை இக்கவிதை காட்டுகிறது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- They went down, they ranged wide; like a spreading fire
- their cruel rage came to its height; as they punched each other's chests,
- the long walls split; the towering hills were crushed;
- all over Ilaṅkai the ramparts crumbled and fell apart.
What the poem says
The fight spreads in every direction, and their anger grows like a wildfire. Their blows to each other's chests are so heavy that the shock splits walls, crushes the hills and brings down Ilaṅkai's ramparts.
The commentary remarks that the poet seems to understand how vibration can make buildings collapse.