கம்பராமாயணம் 6961 · யுத்த 11.25

Section யுத்த காண்டம் / 11. மகுட பங்கப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1செறிந்து உயர் கறங்கு அனையர் மேனிநிலை தேரார்,
பிறிந்தனர் பொருந்தினர் எனத் தெரிதல் பேணார்,
எறிந்தனர்கள், எய்தினர்கள் இன்னர் என, முன் நின்று
அறிந்திலர் அரக்கரும்; அமர்த்தொழில் அயர்ந்தார்.

பொருள் · Meaning in Tamil

செறிந்து உழல் கறங்கு அனையர் - நெருங்கிச் சுழலும் காற்றாடி போன்றவராய் உள்ள அவ்விருவருடைய; மேனி நிலை தேரார் - உடல்கள் எவ்விடத்துள்ளன எனத் தெளிய முடியாதவராயும்; பிறிந்தனர் பொருந்தினர் எனத் தெரிதல் பேணார் - (அவர்கள் இப்போது) பிரிந்துள்ளனர் சேர்ந்துள்ளனர் என்பதனையும் அறிய முடியாதவராயும், இன்னார் எறிந்தனர்கள் - இன்னார் இன்னாரை வீசினார்; இன்னார் எய்தினர்கள் - இன்னார் இன்னாரைக் கிட்டினார்; என முன் நின்று அரக்கரும் அறிந்திலர் - என்பதனையும் முன்னே நின்றும் அரக்கரும் அறிய இயலாதவராயும்; அமர்த்தொழில் அயர்ந்தார் - அரக்கர்கள் அப்போர்த்தொழிலைக் கண்டு மனம் தளர்ந்தார்கள்.

மற்போரில் விரைவே மிக முக்கியம் எனக் கருதப்படும் மற்போர் வல்ல அரக்கர்களாலும் இவர்களின் துரித கதியைக் கண்டு உணர முடியவில்லை; ஆதலால் அரக்கரும் மனந்தளர்ந்து போனார்கள் என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Unable to make out where their bodies were, like spinning tops whirling close,
  2. unable to tell whether they were apart or joined,
  3. unable, though standing right before them, to know who threw, who reached whom,
  4. the demons grew faint at that fighting.

What the poem says

The two move so fast, spinning like tops, that the demon spectators cannot follow it. They cannot tell where each body is, whether the fighters are apart or locked together, or who is throwing whom.

Even the demons, who are expert wrestlers and know that speed is everything in a wrestling bout, are left stunned.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ceṟintu uḻal kaṟaṅku aṉaiyar mēṉi nilai tērār,
piṟintaṉar poruntiṉar eṉat terital pēṇār,
eṟintaṉarkaḷ, eytiṉarkaḷ iṉṉar eṉa, muṉ
aṟintilar arakkarum; amart toḻil ayarntār.